கனடா, அமெரிக்காவில் வரலாறு காணாத வெப்பம்; நூற்றுக்கணக்கானோர் பலி
அரசு குளிரூட்டும் மையங்களை அமைத்துள்ளதோடு, வீடற்றவர்களுக்கு தண்ணீரை விநியோகிப்பது தொடர்பான, பிற நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மேற்கு அமெரிக்கா மற்றும் கனடாவில் வரலாறு காணாத வகையில் வெப்பம் நிலவுகிறது. கடுமையாக வீசும் அனல் காற்றுக்கு, இது வரை 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
கடும் வெயில் காரணமாக மக்கள் அவதியுறும் நிலையில், வெப்பத்தை தணிக்க ஆங்காங்கே கூலிங் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அரசு குளிரூட்டும் மையங்களை அமைத்துள்ளதோடு, வீடற்றவர்களுக்கு தண்ணீரை விநியோகிப்பது தொடர்பான, பிற நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இருப்பினும், நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
கனடாவில் (Canada) உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த வாரத்தில், 45 டிகிரி செல்சியசாக பதிவான வெப்பநிலை, தற்போது, 49.5 டிகிரி செல்சியசாக அதிகரித்துள்ளது. இப்பகுதியில் 486 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், மேலும் வெப்ப நிலை அதிகரிக்கும் வகையில் இந்த மாகாணம், காட்டுத்தீயாலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | Pakistan: ஜகோபாபாத்தில் உலகில் எங்கும் பதிவிடப்படாத அளவு ரெகார்ட் வெப்பநிலை பதிவு
மேலும், கனடாவில் உள்ள வான்கூவர் நகரில் மட்டும் கடுமையான அனல் காற்றுக்கு 134 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதே போன்று ஒரேகானில் (Oregon) மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 79 ஐ எட்டியுள்ளது என்று ஓரிகான் மாநில மருத்துவ அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெப்பத்தை தணிக்க, மக்கள் கடற்கரைகளிலும், நீச்சல் குளங்களிலும் கூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடும் வெப்பம் காரணமாக கனடாவின் பல பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் வரலாறு காணாத வெப்பம் நிலவுவது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "இந்த வாரம் பதிவான வெப்பநிலை வரலாறு காணாத அளவாக உள்ளது, உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன, காட்டுத்தீ அபாயம் மிக அதிகமாக உள்ளது" என்றார்.
கனடா மட்டுமின்றி, அமெரிக்காவின் (America) மேற்கு பகுதியிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளது. அமெரிக்காவில் வாஷிங்டனில் வெப்பத்தினால் குறைந்தது 20 பேர் இறந்து விட்டனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் (Joe Biden), மேற்கு மாநிலங்களைச் சேர்ந்த ஆளுநர்களுடனான ஒரு மெய்நிகர் சந்திப்பில், "இந்த ஆண்டு மேற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ அச்சுறுத்தல் இது வரை இல்லாத அளவிற்கு அதிகமானதாக உள்ளது" என்று கூறினார்.
ALSO READ | பிரிட்டனில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு குட் நியூஸ்; விசா விதிகளில் தளர்வு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR