35 பேர் பலி, 200 பேர் காணவில்லை, 300 குடும்பம் கேள்விக்குறி- இலங்கையில் கனமழை.
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணியில் ராணுவம், போலீஸார், விமானப்படை மற்றும் பேரிடர் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். கனமழையால் இதுவரை 35 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 200 பேரைக் காணவில்லை. நிலச்சரிவு காரணமாக 300 குடும்பத்தினர் புதையுண்டதாக செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.
இதைப்பற்றி ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
கனமழை காரணமாக இரண்டு கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதில் பெரும்பாலான வீடுகள் மண்ணில் புதைந்தன. இதுவரை சுமார 150 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் காணாமல் போன 200 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது என்றும், இலங்கை முழுவதும் 3 லட்சம் அதிகமான பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வேறு பகுதியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.