Hijab Controversy: உலகின் `இந்த` நாடுகளில் ஹிஜாப் அணிய தடை!
ஐரோப்பாவில் மட்டுமல்லாது பல முஸ்லிம் நாடுகளிலும் ஹிஜாப் தொடர்பாக கடுமையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
கர்நாடக ஹிஜாப் தடை வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவு அமலில் இருக்கும் என்றும், 'தகுந்த வழிகாட்டுதலுக்காக' தலைமை நீதிபதிக்கு இந்த வழக்கு பரிந்துரைக்கப்படுவதாக தெரிவித்தது. உச்ச நீதிமன்றம் நீதிபதி ஹேமந்த் குப்தா மற்றும் நீதிபதி சுதன்ஷு துலியா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். நீதிபதி ஹேமந்த் குப்தா, ஹிஜாப் தடைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து, ஹிஜாப் மீதான தடையை உறுதி செய்தார். மறுபுறம், ஜிஜாப் தடை செல்லாது என கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நீதிபதி சுதன்ஷு துலியா ரத்து செய்தார். இப்போது இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 3 அல்லது 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே, கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஹிஜாப் மீதான தடை இன்னும் தொடரும்.
பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள ஹிஜாப்
ஹிஜாப் தடை பற்றிய விவாதம் இந்தியாவில் தொடர்ந்தாலும், உலகின் பல நாடுகளில் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் பல முஸ்லிம் நாடுகளும் இதில் அடங்கும். இந்த நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. இதில் துனிசியா, ஆஸ்திரியா, டென்மார்க், பிரான்ஸ், பெல்ஜியம், தஜிகிஸ்தான், பல்கேரியா, கேமரூன், சாட், ஜெர்மனி, கனடா, காங்கோ, காபோன், நெதர்லாந்து, சீனா, மொராக்கோ, அஜர்பைஜான், லெபனான், எகிப்து, சிரியா, இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் அடங்கும்.
பிரான்சில் புர்கா-ஹிஜாப் அணிந்து பள்ளிக்குள் நுழைய தடை
2004 இல் பள்ளிகளில் மதம் சார்ந்த ஆடைகளை தடை செய்த முதல் ஐரோப்பிய நாடு பிரான்ஸ். இதற்குப் பிறகு, 2011 ஆம் ஆண்டில், பொது இடங்களில் முகத்தை மூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. 2021 இல், பிரான்சின் தேசிய சட்டமன்றம் பிரிவினைவாத மசோதாவை நிறைவேற்றியது. இதன்படி, பள்ளிப் பயணங்கள், பொது இடங்கள், தனியார் போக்குவரத்து ஆகியவற்றில் பயணம் செய்யும் போது ஹிஜாப் அணிவது அல்லது முகத்தை மறைக்கும் ஆடைகளை அணிவது தடைசெய்யப்பட்டுள்ளது.
சாட் நாட்டிலும் தடை
ஆப்பிரிக்க நாடான சாட் நாட்டில் பெரும்பான்மையான மக்கள் முஸ்லிம்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக 2015 ஆம் ஆண்டு முழு முகத்தை மூடுவதற்கு அரசாங்கம் தடை விதித்தது. போகோ ஹராம் என்ற பயங்கரவாத அமைப்பால் 34 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கையை அரசு எடுத்தது.
ரஷ்யாவிலும் ஹிஜாப் அணிய தடை
பள்ளிகளில் ஹிஜாப் தடை செய்யப்பட்ட நாடுகளில் ரஷ்யாவும் அடங்கும். ரஷ்யாவின் ஸ்ட்ராவ்ரூபூல் பகுதி 2012 ஆம் ஆண்டு பள்ளிகளில் ஹிஜாபை தடை செய்தது. இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று, 2013ல் உச்ச நீதிமன்றமும் இந்தத் தீர்ப்பை உறுதி செய்தது.
மேலும் படிக்க | ஹிஜாப் விவகாரம்: கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டென்மார்க்கில் சர்ச்சைக்குப் பிறகு இயற்றப்பட்டசட்டம்
2017 ஆம் ஆண்டில், டென்மார்க் பாராளுமன்றம் பொது இடங்களில் முகத்தை மூடுவதற்கு தடை விதித்தது. டென்மார்க்கில் ஒருவர் முகத்தை மறைத்தால், முதல் முறை என்றால் அவருக்கு சுமார் 12 ஆயிரம் ரூபாய் அபராதமும், மீண்டும் பிடிபட்டால் சுமார் 85 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.
சீனாவிலும் கடுமையான சட்டங்கள் அமல்
ஜி ஜின்பிங் அரசும் பள்ளிகளில் ஹிஜாபை தடை செய்துள்ளது. சீனாவில், மத அடையாளத்துடன் கூடிய உடையுடன் பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களில் நுழைய முடியாது.
சில இஸ்லாமிய நாடுகளிலும் ஹிஜாப் அணிய தடை
ஹிஜாப் தொடர்பான தடை பல முஸ்லிம் நாடுகளிலும் உள்ளது. சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தானில் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்லலாம். ஆனால் பல இஸ்லாமிய நாடுகள் இதற்கு தடை விதித்துள்ளன. 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில், சிரியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் முழு முகத்தை மூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டில் 70 வீதமான மக்கள் முஸ்லிம்கள்.
பல்கேரியாவில் ஹிஜாப் அணிவது சட்டவிரோதமானது
பல்கேரியாவில் ஹிஜாப் அணிவது சட்டவிரோதமாக கருதப்படுகிறது. பல்கேரிய அரசாங்கத்தின் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு நோக்கத்திற்காக இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு ஹிஜாப் அணிந்தால் அபராதம் மற்றும் தண்டனை ஆகிய இரண்டுக்கும் விதிக்கப்படும்.
இத்தாலி மற்றும் இலங்கையில் தடை
ஹிஜாப் தொடர்பாக இலங்கை மற்றும் இத்தாலி அரசுகள் கடுமையான விதிமுறைகளை வகுத்துள்ளன. புர்கா மற்றும் ஹிஜாப் அணிவது இங்கு தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி யாராவது அணிந்தால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் படிக்க | டெங்குக் காய்ச்சல் சிகிச்சைகள்! இந்த அறிகுறி இருந்தால் எச்சரிக்கை அவசியம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ