எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.22 ஆயிரம் கோடி மானியம்; பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 12, 2022, 05:41 PM IST
  • எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு பெரும் நிவாரணம் அளித்துள்ளது.
  • மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
  • பெட்ரோல், டீசல் விலைகளில் இருந்து மக்களுக்கு நிவாரணம் வழங்க இந்த முடிவு எடுக்கப்பட்டது.
எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.22 ஆயிரம் கோடி மானியம்;  பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு! title=

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 144 நாட்களாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 என்ற விலையிலும், டீசல் ரூ.94.24 என்ற விலையும் விற்பனை செய்யப்படுகிறது. 

இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு பெரும் நிவாரணம் அளித்துள்ளது. இன்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலைகளில் இருந்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன் கீழ், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு முறை வழ்ங்கும் மானியமாக ரூ.22 ஆயிரம் கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | வீழ்ச்சி காணும் கச்சா எண்ணெய் விலைகள்; பெட்ரோல்-டீசல் விலையும் குறையுமா..!!

இதற்கு முன்பு பெட்ரோலிய அமைச்சகம் ரூ.30,000 கோடி மானியம் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது. எண்ணெய் நிறுவனங்கள் LPG சில்லறை விற்பனையில் நஷ்டத்தை சந்திக்கின்றன. இந்த இழப்பை ஈடுகட்ட, இந்த நிவாரணம் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.

எனினும், எண்ணெய் நிறுவனங்கள் வணிக ரீதியான LPG சிலிண்டரின் விலையை 25.50 ரூபாய் குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, அதன் பிறகு டெல்லியில் 19 கிலோ வணிக LPG சிலிண்டரின் விலை 1885 ரூபாயில் இருந்து 1859.50 ரூபாயாக குறைந்துள்ளது. இந்த ஆண்டை பொறுத்தவரை, இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல், தற்போது வரை மொத்தமாக சிலிண்டருக்கு ரூ.494.50 விலை குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அக்டோபர் மாதத்தில் எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1053 ஆக உள்ளது.

மேலும் படிக்க |  உஜ்ஜைன் மகாகாலேஷ்வர் கோயில் காரிடாரை திறந்து வைத்தர் பிரதமர் மோடி!

நாட்டில் பல்வேறு நகரங்களில் பெட்ரோல் விலை நிலவரம்:

டெல்லி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.96.72, டீசல் லிட்டருக்கு ரூ.89.62

மும்பை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.111.35 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.97.28

சென்னை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 மற்றும் டீசல் லிட்டருக்கு  ரூ.94.24

கொல்கத்தா பெட்ரோல் லிட்டருக்கு ரூ.106.03 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.92.76

பெங்களூருவில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101.94 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.87.89

திருவனந்தபுரத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.107.71 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.96.52

ஹைதராபாத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.109.66, டீசல் விலை லிட்டருக்கு ரூ.97.82

போர்ட் பிளேரில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 84.10 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ 79.74

பாட்னாவில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.107.24 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.94.04

குருகிராமில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.97.18 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.90.05

நொய்டாவில் பெட்ரோல்லிட்டருக்கு  ரூ.96.57 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.89.96

லக்னோவில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.96.57 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.89.76

ஜெய்ப்பூரில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.108.48, டீசல் லிட்டருக்கு ரூ.93.72

புவனேஸ்வரில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.103.19 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.94.76

சண்டிகரில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.96.20 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.84.26

மேலும் படிக்க |  Watch Video: கர்தவ்யா பாதையாக மாறும் தில்லி ராஜ பாதை; பிரம்மிக்க வைக்கும் காட்சி!

மேலும் படிக்க | NRI Remittances மற்றும் கிரெடிட் வளர்ச்சியில் அதிகரிப்பை காணும் பெடெரல் வங்கி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News