பங்களாதேஷில் உள்ள ஹிபசாத்-இ-இஸ்லாம் என்ற அடிப்படைவாத அமைப்பின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புதன்கிழமை இந்துக்கள் கிராமத்திற்கு புகுந்து ஆயுதங்களுடன் தாக்கி சுமார் 80 வீடுகளை, அடித்து நொருக்கி சூரையாடினர். அடிப்படைவாதக் குழுவின் இணைச் செயலாளர் மவுலானா முப்தி மாமுனூலின் கருத்தை ஒரு இந்து இளைஞர் விமர்சித்ததை அடுத்து கோபமடைந்த அவரது ஆதரவாளர்கள் இந்த வெறிச் செயலில் ஈடுபட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்து இளைஞர்கள் செய்த விமர்சனத்தால் கோபமடைந்த ஹிபாசத்-இ-இஸ்லாத் அமைப்பின் தொண்டர்கள் செவ்வாய்க்கிழமை இரவு முதல் போராட்டம் செய்து வருகின்றனர். பேஸ்புக் (Facebook) பதிவு ஒன்றில் மத உணர்வுகள் தூண்டப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளனர். அடிப்படைவாதிகளுக்கு தலைவணங்கிய காவல்துறையினர் ஏற்கனவே இந்து இளைஞர்களை கைது செய்திருந்த போதிலும், பயங்கரவாதிகள் இந்துக்கள் உள்ள கிராமத்தை தாக்கினர்.


ஷல்லா உபசிலா  (Shalla Upazila) என்ற இந்து மதத்தை சேர்ந்த நபர்,  வங்க தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலை நிறுவுவதை எதிர்த்த மவுலானா முப்தி மாமுனூலின் கருத்தை விமர்சித்து  பேஸ்புக்கில் (Facebook) பதிவிட்டார். இதனால் அடிப்படைவாத முஸ்லிம்கள் ஷல்லா உப்ஜிலா உள்ள இந்து கிராமமான நவு கான் மீது புதன்கிழமை தாக்கினர்.


ALSO READ | அடி பணிந்தது Facebook... ஆஸ்திரேலியாவில் கையெழுத்தானது ஒப்பந்தம்..!!!


பல இந்துக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அடிப்படைவாதிகள் பல வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தனர். வீடுகளையும் அடித்து நொருக்கினர். தகவல் கிடைத்ததும், அப்பகுதியில் ஏராளமான போலீஸ் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.


பிரதமர் நரேந்திர மோடியின் (PM Narendra Modi)  பங்களாதேஷ் பயணத்திற்கு முன்னர் பங்களாதேஷில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 


ALSO READ | செவ்வாய் கிரக மர்ம பூட்டின் சாவி சால்டா ஏரியில் உள்ளது: NASA விஞ்ஞானிகள்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR