ஆச்சர்ய தகவல்! பாகிஸ்தானில் உள்ள சில ‘இந்து’ அதிர்ஷ்டசாலிகள்!
பாகிஸ்தானில் பணக்கார இந்துக்கள்: பாகிஸ்தானில் இந்துக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன என்றாலும், அதையும் மீறி சில இந்துக்கள் அங்கு பெயரையும் பணத்தையும் சம்பாதித்துள்ளனர் என்பது மிகவும் ஆச்சர்யத்தை கொடுக்கும் விஷயமாகும்.
சிறுபான்மை மக்களை துன்புறுத்தும் சம்பவங்களுக்கும், அவர்களை மதம் மாற்றும் சம்பவங்களும் பாகிஸ்தானில் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன . பிரிவினையின் போது அங்கிருந்த 22% இந்துக்கள் இப்போது 1.6% ஆகக் குறைந்ததற்கு இதுவே காரணம். இருந்தபோதிலும், பாகிஸ்தானின் இந்த விரோதச் சூழலிலும் பெயரும் பணமும் சம்பாதித்த சில இந்துக்கள் உள்ளனர். இந்த நபர்களில் மறைந்த நீதிபதி ராணா பகவன்தாஸ் மற்றும் விக்கெட் கீப்பர் அனில் தல்பட் மற்றும் பாகிஸ்தானுக்காக கிரிக்கெட் விளையாடிய லெக் ஸ்பின்னர் டேனிஷ் கனேரியா போன்றவர்கள் அடங்குவார்கள். இவர்களைத் தவிர, பாகிஸ்தானின் பணக்காரர்களிடையே தங்கள் திறமையின் அடிப்படையில் தங்களை இணைத்துக் கொண்டு, புகழ் பெற்ற சில இந்துக்களும் இருந்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள டாப்-6 பணக்கார இந்துக்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாம்.
1. பேஷன் துறையின் முக்கிய நபராக திகழும் தீபக் பெர்வானி
பாகிஸ்தானின் மிர்பூர் காஸில் பிறந்த தீபக் பெர்வானி அங்குள்ள பணக்கார இந்துக்களில் ஒருவர். தீபக் ஒரு பிரபலமான ஆடை வடிவமைப்பாளர் என்பதைத் தவிர, ஒரு நடிகராகவும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இந்து சிந்தி சமூகத்தைச் சேர்ந்த தீபக், பாகிஸ்தான் பேஷன் துறையின் அனைத்து முக்கிய விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது சொத்து மதிப்பு சுமார் 71 கோடி ரூபாய்.
2. ஸ்னூக்கர் வீரர் நவீன் பெர்வானி
பாகிஸ்தானின் பணக்கார இந்துக்கள் பட்டியலில் நவீன் பெர்வானி இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் பாகிஸ்தானின் பணக்கார இந்துவான தீபக் பெர்வானியின் உறவினர். பாகிஸ்தானின் பிரபல ஸ்னூக்கர் வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 2006 ஆம் ஆண்டு தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டியில் நவீன், பாகிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்தினார். இவரது சொத்து மதிப்பு சுமார் 60 கோடி ரூபாய்.
3. பொழுதுபோக்கு துறையில் கோலோச்சும் சங்கீதா
பாகிஸ்தானில் திரைப்படம் - தொலைக்காட்சிகள் பெரிய அளவில் பார்க்கப்படுவதில்லை என்றாலும், பிரபல கலைஞரும் இயக்குனருமான சங்கீதாவின் ரசிகர்களுக்கு பஞ்சமே இல்லை. கராச்சி நகரில் பிறந்த சங்கீதா 1969 முதல் பாகிஸ்தான் திரையுலகில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பாகிஸ்தானில் திரைப்படத் திரையில் பர்வீன் ரிஸ்வி என்ற பெயரால் அங்கீகரிக்கப்பட்டவர். அவர் பல முக்கியமான வெற்றி படங்களில் பணியாற்றியுள்ளார். இவரது சொத்து மதிப்பு சுமார் 40 கோடி ரூபாய்.
மேலும் படிக்க | பாகிஸ்தான் எல்லை பகுதியை மூடிய தாலிபான்... சிக்கலில் பாகிஸ்தான்!
4. வித்தியாசமான அரசியல் பிம்பம் கொண்ட ரீட்டா ஈஸ்வர் வர்
பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்த ரீட்டா ஈஸ்வர், பாகிஸ்தானின் பணக்கார பெண் அரசியல்வாதிகளில் ஒருவர். பாகிஸ்தானில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை. அதிலும் இந்துப் பெண்களின் நிலையை பற்றி சொல்லவே வேண்டாம். இருந்தும் ரீட்டாவின் இமேஜ் வித்தியாசமானது. அவர் 2013 முதல் 2018 வரை பாகிஸ்தானின் தேசிய சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவரது சொத்து மதிப்பு சுமார் 30 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
5. பாகிஸ்தானின் தலித் இந்து எம்பி டாக்டர் கதுமல் ஜீவன்
பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய இந்து சமூகமான மேக்வார் இனத்தை சேர்ந்த டாக்டர் கதுமல் ஜீவனும் அங்குள்ள செல்வாக்கு பெற்ற தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பிபிபி) பட்டியலிடப்பட்ட சாதி இந்து எம்பியான கதுமல், சிந்து மாகாணத்தைச் சேர்ந்தவர். 1988ல், சிந்து சட்டமன்றத் தேர்தலில் PPP சார்பில் போட்டியிட்டார். நாடாளுமன்றத்திற்கு மூன்று தேர்தல்களில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினரானார், 1998 இல் நவாஸ் ஷெரீப்பின் அரசாங்கத்தில் அமைச்சரானார். அப்போதிருந்து, அவர் கிட்டத்தட்ட எல்லா அரசாங்கங்களிலும் பங்கேற்று வருகிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.15 கோடி என கூறப்படுகிறது.
6. பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ராணா சந்திரசிங்
ராணா சந்திர சிங் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் மூத்த தலைவராக இருந்தார். உமர்கோட்டில் வசிக்கும் ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினரான ராணா சந்திர சிங், ஆகஸ்ட் 1, 2009 அன்று கராச்சியில் இறந்தார். ஆனால் இன்றும் அவரது குடும்பம் பணக்கார இந்து குடும்பமாகவே உள்ளது. பாகிஸ்தானின் தொழிலாளர் அமைச்சராகவும் நிலையில், ஒரு காலத்தில் பாகிஸ்தானில் மிகவும் செல்வாக்கு மிக்க இந்துவாகக் கருதப்பட்ட ராணா, 1990 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் இந்துக் கட்சியையும் (PHP) நிறுவினார். இறக்கும் போது அவரது சொத்து மதிப்பு ரூ.12 கோடியாக இருந்தது.
மேலும் படிக்க | பாகிஸ்தான் சென்ற இந்திய குரங்குக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! கை விரிக்கும் வனத்துறை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ