நீண்ட காத்திருப்பிற்கு பின் வெளியான அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவினை அடுத்து ஜோ பிடன் (Joe Biden) அமெரிக்காவின் 46வது அதிபராகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் (Kamala Harris) துணை அதிபராகிறார். அவர் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்பதோடு, கருப்பினத்தை சேர்ந்த முதல் துணை அதிபர் என்ற பெருமையையும் பெறுகிறார். 


ஜோபிடனுக்கும் (Joe Biden)  கமலா ஹாரிஸுக்கும்  பிரதமர் நரேந்திர மோடி, வாழ்த்துக்களை தெரிவிவித்துக் கொண்டுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த, தமிழ்நாட்டின் திருவாரூரை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவிக்கும் போது, உங்களது சித்திகளுக்காக மட்டும் அல்லாமல், அனைத்து அமெரிக்கா வாழ் இந்தியர்களை நினைத்து பெருமை கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். 



 



இந்தத் தேர்தலில், 1900 க்குப் பிறகு, அதிகபட்ச வாக்குகள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்தலில் பிடனுக்கு கிடைத்த அளவு வாக்குகள் வேறு எந்த அதிபருக்கும் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. டொனால்ட் ட்ரம்பை அதிக வாக்குகள் பெற்று வீழ்த்தி வெள்ளை மாளிகை வேந்தனாகிறார் ஜோ பிடன். 


அமெரிக்காவின் துணைத் தலைவராகவும் இருந்த பிடென், அமெரிக்க வரலாற்றில் இளைய வயதில் செனட்டர் ஆகி மிக இளைய செனட்டர்களில் ஒருவராக  இருக்கும், அதே நேரத்தில், 77 வயதான பிடன் அமெரிக்க வரலாற்றில் மிக வயதான அதிபர் என்ற பெருமையையும் பெற்று விட்டார். ஜோ பிடென் 20 நவம்பர் 1942 இல் பென்சில்வேனியாவின் ஸ்க்ராண்டனில் பிறந்தார். முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் 2009 முதல் 2017 வரை அமெரிக்காவின் 47 வது துணைத் தலைவராக பணியாற்றினார்.


அமெரிக்காவின் இந்த வரலாற்றுத் தேர்தலில் இந்திய-ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸும் (kamala Harris) வரலாறு படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம், அமெரிக்காவின் துணைத் தலைவர் பதவியை வகித்த முதல் பெண் என்ற பெருமையை ஹாரிஸ் பெறுகிறார். இதன் மூலம், அவர் அமெரிக்காவின் முதல் பெண், முதல் கருப்பு மற்றும் முதல் தெற்காசியாசியாவை சேர்ந்த, முதல் அமெரிக்க துணை அதிபராக இருப்பார். தமிழ்நாட்டில் அன்புடன் சித்தி என அழைக்கப்படும் கமலா ஹாரிஸ் தமிழ்நாட்டில் உள்ள திருவாரூர் மாவட்டத்தில் உள்ள துளசேந்திராபுரம் மற்றும் பைங்கநாடு கிராமங்கள் பூர்வீகம் ஆகும்.


சித்தி கமலா ஹாரிஸின் வெற்றியை அந்த கிராமத்தினர் கொண்டடுகின்றனர். அவர்களுக்கு சிறிது நாட்கள் முன்பே தீபாவளி வந்துவிட்டது எனலாம். 


ALSO READ | சித்தி கமலா ஹாரிஸ் வெற்றியை கொண்டாட காத்திருக்கும் தமிழக கிராமம்..!!!


கமலா ஹாரிஸ் 1964 இல் ஆக்லாந்தில் பிறந்தார். இவரது தாய் சியாமலா கோபாலன் ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், ஜமைக்காவில் பிறந்த தந்தை டொனால்ட் ஹாரிஸ், மார்பக புற்றுநோய் விஞ்ஞானி. ஹாரிஸுக்கு 7 வயதாக இருந்தபோது அவரது பெற்றோர் விவாகரத்து செய்தனர்.


ஹாரிஸின் தாய்வழி தாத்தா பி.வி. கோபாலன் முன்னாள் இராஜீய துறை அதிகாரி மற்றும் தமிழ்நாட்டின் துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர். இவரது தாய்வழி பாட்டி ராஜம் அருகிலுள்ள பங்கநாடு கிராமத்தைச் சேர்ந்தவர். கமலாவின் மூதாதையர்கள் பல தசாப்தங்களுக்கு முன்னர் கிராமத்தை விட்டு வெளியேறிய போதிலும், குடும்ப உறுப்பினர்கள் துளசேந்திரபுரத்தில் உள்ள கோயிலுடன் தங்கள் உறவைப் பேணி வருகின்றனர்.


கமலா ஹாரிஸ் 1998 இல் ஹாரிஸ் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்ட பட்டம் பெற்றார். ஹாரிஸ் பின்னர் சான் பிரான்சிஸ்கோ மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் பணிபுரிந்தார், அங்கு அவர்  குற்றவியல் பிரிவின் பொறுப்பாளராக இருந்தார்.


2003 ஆம் ஆண்டில், அவர் சான் பிரான்சிஸ்கோ நகரம் மற்றும் மாவட்டத்திற்கான மாவட்ட வழக்கறிஞராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


அவர் 2011 இல் கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாகி வரலாறு படைத்தார். இதன் பின்னர் அவர் அரசியலில் இன்னும் தீவிரமாக பணியாற்றினார்.


2016 செனட் தேர்தலில் லோரெட்டா சான்செஸை தோற்கடித்து அமெரிக்க செனட்டில் பணியாற்றிய முதல் தெற்காசிய அமெரிக்கர் என்ற பெருமையை ஹாரிஸ் பெற்றார்.


ஜனநாயகக் கட்சி அவரை 2020 இல் துணை அதிபர் வேட்பாளராக நிறுத்தியது, அவர் அதில் வெற்றி பெற்று வரலாற்றை படைத்துள்ளார்.


1992  ஆண்டிற்கு பிறகு அதிபரான அனைவரும் இரு முறை தொடர்ந்து அதிபராக பதவி வகித்துள்ளனர். இந்தத் தேர்தல் தோல்வியடைந்த நிலையில், டொனால்ட் டிரம்ப் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறை மீண்டும் அதிபர் ஆகாமல் தோற்றுப் போன முதல் அதிபராவார்.  


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR