`Hitler did good things` சர்ச்சைகளின் நாயகன் டொனால்ட் டிரம்பின் ஹிட்லர் புகழ்
முதல் உலகப் போரின் 100 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதற்காக டிரம்ப் ஐரோப்பாவுக்குச் சென்றபோது Hitler did good things` என ஹிட்லரை புகழ்ந்து பேசிய தகவல் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது...
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிவிட்டார், ஆனால் அவர் இன்னும் உலகத்தின் கவனத்தை ஈர்க்கிறார். இந்த முறை, அவர் இன்னொரு புத்தக சர்ச்சையின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது, அப்போதைய Chief of Staff ஜான் கெல்லியிடம், "ஹிட்லர் நிறைய நல்ல காரியங்களைச் செய்தார்" என்று கூறியிருக்கிறார்.
இந்த அதிர்ச்சியூட்டும் அறிக்கையை வால் ஸ்ட்ரீட் பத்திரிகையின் மைக்கேல் பெண்டர் தனது புதிய புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். வெளிப்படையாக, நாங்கள் இந்த தேர்தலில் வென்றோம் என்ற பொருள்படும் 'Frankly, We Did Win This Election' என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
முதல் உலகப் போரின் 100 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதற்காக டிரம்ப் ஐரோப்பாவுக்குச் சென்றபோது, இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. அப்போது டிரம்புடன் பேச அவகாசம் கிடைத்தபோது, கெல்லி உலகப் போர் தொடர்பான விரிவான தகவல்களை பேசிக் கொண்டிருந்தார். அப்போது, "முதல் உலகப் போரிலிருந்து இரண்டாம் உலகப் போருக்கான நீட்சி மற்றும் ஹிட்லரின் செயல்பாடுகளை" விளக்கினார்.
Also Read | Haiti அதிபர் ஜோவெனல் மோயிஸ் படுகொலை; மனைவியின் நிலைமை கவலைக்கிடம்
அந்த சந்தர்ப்பத்தில் தான், "ஹிட்லர் நிறைய நல்ல காரியங்களைச் செய்தார்" என்று டிரம்ப் சொல்லியிருக்கிறார். உடனே ட்ரம்பின் கூற்றுக்களை நிராகரித்த கெல்லி, "டிரம்ப் நினைப்பது தவறு என்று கூறினார், ஆனால் டிரம்ப் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை" என்று மைக்கேல் பெண்டர் தனது புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.
ஹிட்லரின் ஆட்சியின் கீழ் 1930 களில் ஜெர்மனி பொருளாதார மீட்சி அடைந்ததை சுட்டிக்காட்டி தனது கருத்தை டிரம்ப் நியாயப்படுத்தியதாக புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
கெல்லி மீண்டும் டிரம்பின் கருத்துக்கு மாற்றுக் கருத்தை முன்வைத்தார். "நாஜி இனப்படுகொலைக்கு (Nazi genocide) உட்படுத்தப்பட்டதை விட ஜெர்மன் மக்கள் ஏழைகளாக இருந்திருக்கலாம்" என்று கெல்லி தெரிவித்தார்.
ஹிட்லர் தொடர்பான அந்நாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்துகளுக்கு எதிராக பேசிய கெல்லி "அடோல்ஃப் ஹிட்லரை (Adolf Hitler) ஆதரிக்கும் எதையும் நீங்கள் எப்போதும் சொல்ல முடியாது" என்று கூறினார்.
Also Read | வரலாறு காணாத கடும் வறட்சியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான்
போரில் இறந்த அமெரிக்க துருப்புக்களை "தோல்வியுற்றவர்கள்" என்று கூறி ட்ரம்ப் சிக்கலில் மாட்டிய அதே காலகட்டத்தில் தான் இந்த சம்பவமும் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பாக அனைத்து குற்றச்சாட்டுக்களையும் டிரம்ப் மறுத்துள்ளார். டிரம்புக்கு சிக்கலை ஏற்படுத்தும் 'Frankly, We Did Win This Election' புத்தகம் ஜூலை 13, 2021 அன்று வெளியிடப்பட உள்ளது. கார்டியன் (the Guardian), ஊடகம் புத்தகத்தின் நகலை முன்கூட்டியே பெற்றுள்ளது.
புத்தகம் வெளிவந்ததும் மேலும் பல சுவராசியமான மற்றும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read | July 07: இன்றைய தினம் வரலாற்றில் பதிவு செய்த முக்கிய நிகழ்வுகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR