பிரதமர் மோடியை சந்திப்பதில் பெருமிதம்: டிரம்ப் மகள் டிவிட்
நவம்பர் மாத இறுதியில் ஹைதராபாத் நகரில் நடைபெற உள்ள உலகளாவிய தொழில் முனைவோர் உச்சி மாநாட்டில் (GES) பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவான்கா இந்தியா வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தின் போது, உலகத் தொழில் முனைவோர் மன்றத்திற்கு தலைமை வகிக்க, டிரம்ப்பின் மகள் இவான்காவிற்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பினை ஏற்று இவான்கா இந்தியா வருகிறார்.
இவான்கா ஒரு அமெரிக்க தொழிலதிபர், முன்னாள் பேஷன் மாடல் மற்றும் அவரது தந்தையின் உதவியாளரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் ஹைதராபாத்தில் நடக்கும் மாநாட்டில் அமெரிக்க பிரதிநிதி குழு சார்பில் தலைவராக இவாங்கா பங்கேற்பதை எதிர்பார்ப்பதாக பதிவு செய்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இனி இந்தியாவிற்கான தொழிற்முனைவோர் அமெரிக்க குழுவிற்கு இவாங்கா தலைமை வகிப்பதாகவும், உலகளவில் பெண்கள் தொழில் முனைவதற்கு ஆதரவளிப்பதாகவும் மேலும் இந்திய பிரதமர் மோடியை சந்திப்பதில் பெருமிதம் அடைகிறேன் என்று அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.