அதிபர் டிரம்புக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!
அதிபர் டிரம்புக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது!
அதிபர் டிரம்புக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது!
435 உறுப்பினர்கள் கொண்ட பிரதிநிதிகள் சபையில், இறுதி வாக்கெடுப்பு 229-198 என்ற எண்ணிக்கையில் பதிவாகி, டிரம்ப் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவும், காங்கிரஸைத் தடுத்ததாகவும் பெரும்பான்மை பிரதிநிதிகள் சபை அறிவித்துள்ளது. ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸின் துளசி கபார்ட் மட்டுமே "தற்போது" வாக்களித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அதிகார துஷ்பிரயோகம் மற்றும் காங்கிரஸின் தடங்கல் ஆகிய இரண்டிலும் டிரம்ப் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார், மேலும் இரண்டு கட்டுரைகளும் இப்போது அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்க செனட்டிற்கு கட்டுரைகளை அனுப்பியுள்ளது.
எனினும், குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள செனட்டால் ஜனாதிபதி விடுவிக்கப்படுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட மூன்றாவது அமெரிக்க ஜனாதிபதியாக மட்டுமே வரலாற்றில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட இருக்கும் ஜோ பிடனுக்கு எதிராக உக்ரைன் நாட்டில் அதிபர் டிரம்ப் சதி திட்டம் தீட்டியதாகவும், பிடனுக்கு எதிராக உக்ரைன் அதிபரிடம் சதி செய்ய பேரம் பேசியதாவும் டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து அதிபர் டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என புகார் அளிக்கப்பட்டது.
டிரம்பின் சூழ்ச்சி திட்டங்கள் முலம் அவர் அரசியலமைப்புச் சட்டம், தேசிய பாதுகாப்பு, அதிபர் தேர்தலுக்கான நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றுக்கும் ஆபத்து விளைவித்து விட்டார் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இந்த குற்றச்சாட்டுக்களின் பேரில் டிரம்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபை, செனட் சபை இரண்டிலும் வெற்றி பெற்றால், டிரம்ப் தனது பதவியை இழக்க நேரிடும்.
இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள டிரம்ப், அதிபருக்கு எதிராக பதவி நீக்கம் தீர்மானம் கொண்டு வருவது, நாட்டின் மீதான அவமதிப்பு என குறிப்பிட்டுளார்.
இதனிடையே டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, லாஸ் ஏஞ்சலிஸ், டென்வர், லூசியானா, சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் 240 ஆண்டு கால வரலாற்றில், 3 அதிபர்கள் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. 1868-ஆம் ஆண்டு தனது அரசியல் எதிரிகளைக் கொல்ல தூண்டியதாக அப்போதைய அதிபர் ஆண்ரூ ஜான்சன் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில் அவர் செனட் சபையில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1974 -ஆம் ஆண்டு வாட்டர் கேட் ஊழலில் சிக்கிய ரிசர்ட் ஜான்சன் மீது பதவி நீக்க திர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் ஓட்டெடுப்பைச் சந்திக்கும் முன்பே நிக்சன் அதிபர் பதவியிலிருந்து விலகினார்.
இதேபோல் 1998-ஆம் ஆண்டு வெள்ளை மாளிகை பெண் ஊழியரான மோனிகா லுவன்ஸ்கி-யுடன் பாலியல் உறவு கொண்டதாக எழுந்த புகாரில் அதிபர் கிளிண்டன் மீது பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த தீர்மானம் பிரிதிநிதிகள் மற்றும் செனட் சபைகளில் தோற்கடிக்கப்பட்டது
இந்நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. புதன்கிழமை பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மையானது அதிபர் டொனால்ட் டிரம்பை உயர் குற்றங்கள் மற்றும் தவறான செயல்களுக்காக குற்றஞ்சாட்ட வாக்களித்தது. அமெரிக்க வரலாற்றில் மூன்றாவது முறையாக இந்த வாக்கெடுப்பு ஒரு அதிபருக்கு எதிராக வாக்களித்து செனட் சபைக்கு அனுப்பி வைத்துள்ளது.
அமெரிக்கா நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் வாக்களிக்கும் அதிகாரம் பெற்ற 435 உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு இங்கு 233 உறுப்பினர்களும் டிரம்பின் குடியரசு கட்சிக்கு 197 உறுப்பினர்களும் உள்ளனர். இதனால் பிரதிநிதிகள் சபையில் டிரம்ப்-க்கு எதிரான தகுதி நீக்க தீர்மானம் எளிதாக நிறைவேறியது.
எனினும் இதன்பின்னர் இந்த வாக்கெடுப்பு செனட் சபையில் நடைபெற இருக்கிறது. அதிபர் டிரம்பின் குடியரசு கட்சிக்கு செனட் அவையில் 53 உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு 47 உறுப்பினர்கள் உள்ளனர். அங்கு டிரம்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றால் 66 (3-ல் இரண்டு பங்கு உறுப்பினர்கள்) செனட் உறுப்பினர்களின் பலம் தேவை. இதனால் செனட் சபையில் டிரம்ப் காப்பாற்றப்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.