கருக்கலைப்புக்கு எதிராக நடைபெற்ற அமைதி புரட்சி-யின் எதிரொலியாக அயர்லாந்தில் கருக்கலைப்பு தடை சட்டத்தில் மாற்றம் கொண்டுவர முடிவு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவைச் சேர்ந்த பல் மருத்துவர் சவீதா ஹாலப்பனவர் அயர்லாந்தில் கருக்கலைப்பு மறுக்கப்பட்டதால் உயிரிழந்தார். 31 வயதான சவீதா 17 வார கர்ப்பிணியாக இருந்தபோது அயர்லாந்து மருத்துவமனையில் கருச்சிதைவு ஏற்பட்டதால் கருக்கலைப்பு செய்ய அனுமதி கோரினார் ஆனால் அயர்லாந்தின் சட்டப்படி அவருக்கு கருக்கலைப்பு செய்ய மறுக்கப்பட்டது. 


இந்தநிலையில், கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு 2012-ம் அக்டோபர் மாதம் அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இதைத் தொடர்ந்து கருக்கலைப்புக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதா? வேண்டாமா? என்பது பற்றி பொதுவாக்கெடுப்பு நடத்த அயர்லாந்து முடிவு செய்தது. இந்த வாக்கெடுப்பில் சுமார் 66.4 சதவீத மக்கள் கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்க்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 


இது குறித்து அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர் கூறுகையில் தனது நாட்டின் "அமைதியான புரட்சி" இது என்று பாராட்டியுள்ளார். மேலும் இந்த வருடத்தின் இறுதியில் புதிய கருக்கலைப்பு சட்டம் இயற்றப்படும் என வரத்கர் தெரிவித்தார். 



2013-ம் ஆண்டிலிருந்து, அயர்லாந்தில் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே கருக்கலைப்புக்கு அனுமதி உண்டு எனதேரிவித்திருன்தது குறிப்பிடத்தக்கது!