துருக்கி தலைநகர், இஸ்தான்புலில் உள்ள பிரதான கடைவீதி பகுதியில் நேற்று பயங்கர  குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 80க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்றும் துருக்கி நாட்டு அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.  மேலும், இது மனித வெடிகுண்டு தாக்குதல் என அந்நாட்டு துணை அதிபர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சம்பவம் குறித்து துருக்கி நாட்டு அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் அளித்த பேட்டியில்,"இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என நாங்கள் கூறினால், அது தவறாக கூட இருக்கலாம். ஆனால், முதற்கட்ட தகவலில் இது பயங்கரவாதிகள் சதிச்செயலாகவே தெரிகிறது. இந்த குண்டுவெடிப்புக்கு காரணமாகவர்களை எங்கள் அரசு தேடிவருகிறது" என்றார். 


குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தை போலீசார் முழுவதுமாக தங்களின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளனர்.  நகரத்தை ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. 


மேலும் படிக்க | Dallas Aircraft crash video: விமான சாகசத்தில் விபரீதம்... 2 விமானங்கள் மோதி பயங்கர விபத்து - 6 பேர் பலி!


இந்த சம்பவத்தை நேரில் கண்ட 57 வயதான செமல் டெனிசி என்பவர் கூறுகையில்,"சம்பவ இடத்தில் இருந்து நான் 50-55 மீட்டர் தொலைவில்தான் இருந்தேன். திடீரென குண்டு வெடித்த சத்தம் பயங்கரமாக கேட்டது. முன்று, நான்கு பேர் தரையில் கிடப்பதை அப்போது பார்த்தேன். மக்கள் சத்தத்தை கேட்டு அலறி அடித்து ஓடினர். அந்தளவிற்கு பயங்கரமான சத்தமாக இருந்தது. காது செவிடாகும் அளவிற்கு அந்த சத்தம் அதிகமாக இருந்தது. அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழந்துகொண்டது. 



அங்கிருந்து கிடைத்த வீடியோக்களில், மக்கள் அலறி அடித்து ஓடுவதும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கையில் தூக்கிக்கொண்டு ஓடுவதும் தெரிகிறது. எதனால் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது என்ற அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை. 


மேலும், தொடர் குண்டுவெடிப்புகள் நிகழாமல் இருக்க, சம்பவ நடந்த இடத்தை போலீசார் முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், சம்பவ இடத்தை செய்தியாளர்களால் ஆய்வு செய்ய இயலவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து, பல்வேறு அதிகாரிகள் அங்கு பலத்த பாதுகாப்பை மேற்கொண்டும், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். 


இச்சம்பவம் உள்ளூர் நேரப்படி மாலை 4 மணியளவில் நடந்துள்ளது. சம்பவ நிகழ்ந்த இடம், பிரபலமான இஸ்டிக்லால் கடைவீதி எனவும் அப்பகுதியில் உள்ளூர் பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் அதிகம் கூடியிருந்தாக தெரிவிக்கப்படுகிறது. சமூக வலைதளங்களின் வெளியாகியுள்ள சில வீடியோக்களின் மக்கள் உயிரிழந்து சிதறிக்கிடப்பதும் தெரிகிறது. 


இதே கடைவீதி, 2015-2016 காலகட்டங்களிலும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது. ஐஎஸ் பயங்கர குழு பொறுப்பேற்ற அந்த தாக்குதல்களில் மொத்தம் 500 பேர் உயிரிழந்தனர் மற்றும் 2000-க்கும் மேற்பட்டோருக்கு பல காயங்கள் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | மாலத்தீவு தலைநகர் மாலேயில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 இந்தியர்கள் மரணம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ