சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதவிர, ஐஎஸ் தீவிரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.


இந்நிலையில், இன்று காலை தலைநகர் டமாஸ்கஸில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் மிகப்பெரும் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


டமாஸ்கஸ் விமான நிலையத்தில் பெரிய அளவிலான குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பதை சிரிய மனித உரிமைகள் கண்கானிப்பகத்தின் தலைவர் ராமி அப்தேல் ரஹ்மான் உறுதி செய்துள்ளார்.