இஸ்லமாபாத்: பாக்கிஸ்தான் சுதந்திர தினத்தையொட்டி பாக்கிஸ்தான் சிறையில் இருந்து 30 கைதிகள் விடுவிக்கபட உள்ளதாக பாக்கிஸ்தான் வெளியுறவு துறை அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாக்கிஸ்தானில் நாளை சுதந்திர தினம் கொண்டாப்படுவதை முன்னிட்டு நல்லெண்ண நடவடிக்கையாக இந்திய சிறைக் கைதிகள் 30 பேரை பாகிஸ்தான் விடுதலை செய்கிறது. 


விடுவிக்கபடும் இந்திய சிறைக்கைதிகள் 30 பேரில் 27 பேர் மீனவர்கள் எனவும், இவர்களின் விடுதலை மனிதாபிமான அடிப்படையில்  எடுக்கப்பட்ட நடவடிக்கை எனவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை, இந்திய கைதிகள் விடுதலை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


விடுவிக்கப்படும் கைதிக்கள் இந்திய - பாக்கிஸ்தான் எல்லைப்பகுதியாக வாகா-வில் ஒப்படைக்கப்படுவர் எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அரபியே கடற்பகுதியில் இருநாடுகளுக்கு இடையேயான எல்லை தெளிவாக வரையறுக்கப் படாதாதல், அப்பகுதியில் மீன் பிடிக்கச்செல்லும் மீனவர்களை இருநாட்டு கடற்படையும் அவ்வப்போது சிறைப்பிடித்து வருகின்றனர்.


கடந்த ஜூலை மாதம் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையின் படி, பாகிஸ்தான் சிறைச்சாலைகளில் 418 மீனவர்கள் உட்பட 470 இந்தியர்கள் சிறை கைதிகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது.