ஹார்வி சூறாவளி பாதிப்பு: டெக்சாஸ் செல்கிறார் அதிபர் டிரம்ப்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை (செவ்வாய்) ஹார்வி சூறாவளியால் பதிக்கப்பட்ட டெக்சாஸினை பார்வையிட செல்கிறார்.
ஹார்வி சூறாவளியால் பாதிக்கப் பட்டவர்களின் பாதுகாப்பு, அவர்களது வாழ்வுரிமை ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த பயணம் அமையும் எனவும், இந்த பயணம் எந்தவித இடையூறும் இன்றி நடைபெறும் எனவும் CNN ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார்.
"தற்போது மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் பாதுகாப்பு செயல்திட்டங்கள் குறித்து விவாதித்து வருகிறோம், திட்டமிடல் முடிந்தவுடன் அறிவிக்கப்படும் எனவும் வெள்ளை மாளிகை செய்தி ஊடக செயலர் சாரா ஹக்கபி சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
முன்தாக கார்பஸ் கிறிஸ்டியின் வடகிழக்கில் அமைந்துள்ள ராக்போர்டில், ஹார்வி முதன்முதலாக வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மணிக்கு 215 கி.மீ. வேகத்தில் அதிகபட்ச காற்றுடன் வீசி நகரின் நான்கு பகுதிகளை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
கடந்த 12 ஆண்டுகளில் அமெரிக்காவை தாக்கிய மிக சக்தி வாய்ந்த சூறாவளியாக ஹார்வி கருதப்படுகிறது. "ஹார்வி" காரணமாக 3,000 க்கும் அதிகமான விமானங்கள் இரத்து செய்யப்பட்டன, அமெரிக்காவின் நான்காவது பெரிய நகரமான ஹூஸ்டனில் 2 மில்லியன் மக்கள் வெள்ளத்தால் பதிக்கப் பட்டுள்ளனர்.