இஸ்லாமாபாத்: தேச துரோக வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் டிசம்பர் 17 ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது. 167 பக்கம் கொண்ட அந்த தீர்ப்பில், ஒருவேளை மரண தண்டனைக்கு முன்பாகவே முஷாரஃப் இறந்து விட்டால், அவரது உடலை "இஸ்லாமாபாத்தின் டி-சவுக் பகுதியில் மூன்று நாட்களுக்கு தூக்கில் தொங்கவிட வேண்டும் என அமலாக்க அமைப்புக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் தீர்ப்பில், அரசியல் சட்டத்தை முடக்கி வைத்து நெருக்கடி நிலையை அமல்படுத்தியதாக முஷாரபுக்கு எதிராக தொடரப்பட்ட தேச துரோக வழக்கில் அவர் குற்றம் செய்திருப்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. எனவே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. 


குற்றம் சாட்டப்பட்டவர் (பர்வேஸ் முஷாரஃப்) குற்றவாளியாகக் காணப்படுகிறார். அவர் மீதுள்ள குற்றச்சாட்டின் படி, அவர் உயிருடன் இருந்தாலும் அல்லது இறந்தாலும் அவரது தூக்கிலிடப்படுவார் என்று தீர்ப்பு தெளிவாக கூறப்பட்டு உள்ளது.


அதாவது தற்போது பர்வேஸ் முஷாரஃப் பாகிஸ்தானில் இல்லை. வெளிநாட்டில் தப்பியோடி உள்ளார். இதனால் தப்பியோடி அவரை கைது செய்யும் ஒருவேளை இறந்து கிடந்தால், சட்டத்தின்படி தண்டனை விதிக்கப்பதடத்தை உறுதி செய்வதற்கும், அவரது சடலத்தை பாகிஸ்தானின் டி-சவுக் பகுதில் தூக்கிலிடப்பட வேண்டும் என்று சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம். 03 நாட்களுக்கு அவரது சடலம் தூக்கில் தொங்க வேண்டும்”என்று தீர்ப்பு கூறுகிறது.


பர்வேஸ் முஷாரப்புக்கு எதிரான வழக்கை சிந்து உயர்நீதிமன்றத்தின் (எஸ்.எச்.சி) பெஷாவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வகர் அகமது சேத் அக்பர் மற்றும் லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதி ஷாஹித் கரீம் ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் விசாரித்து வந்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பெஞ்ச் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


முஷாரப்பின் சடலத்தை தூக்கிலிட வேண்டும் என தீர்ப்பு எழுதியது நீதிபதி சேத் ஆவார்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.