புதுடெல்லி: பல செய்திகள் தொடர்ந்து வெளிவந்துக் கொண்டிருந்தாலும், பிரதானமான செய்திகளுக்கென முக்கிய இடம் உண்டு. இன்றைய முக்கியச் செய்திகளாக தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த சில செய்திகள் இவை, தமிழ்நாடு, இந்தியா, உலகம் என பல செய்திகள் முக்கியமானவை.... அவற்றில் சில...  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி பவ்யா லால் (Bhavya Lal) என்பவர் நாசாவின் (NASA) புதிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்


2. கோவிட்-19 தொடர்பாக, உணவு உதவி மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு தொடர்பான நிர்வாக உத்தரவுகளில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார்.


3. வங்காள தேசத்தில் (Bangladesh) சாலை மற்றும் டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்த உலக வங்கி 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குகிறது


4. மியான்மரில் ஆட்சி கவிழ்ப்பு மற்றும் ராணுவ ஆட்சி தொடர்பாக அந்நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் (UNSC) கூடுகிறது


5. மியான்மர் ராணுவ சதித்திட்டம் மற்றும் ஆட்சிக் கவிழ்ப்பு பற்றி சீனா கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை. மியான்மரில் என்ன நடந்தது என்பதை கவனித்து அறிந்து கொள்ள முயற்சிக்கிறோம் என்று கருத்து தெரிவித்துள்ளது.


Also Read | பாலியல் தொந்தரவு அச்சத்தால் நடுங்கிய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்


6. கொரோனா நோய்தொற்று உருவானதாக கருதப்படும் வுஹான் சி.டி.சிக்கு உலக சுகாதார அமைப்பின் (WHO) குழு சென்றுள்ளது.


7. மியான்மரில் ராணுவம் ஆட்சியை கவிழ்த்து, கைப்பற்றியுள்ளதால், பர்மாவுக்கு எதிராக மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்கா அச்சுறுத்துகிறது


8. டெஸ்லா வாகனங்களின் தொடுதிரைகள் தோல்வியுற்றதால் விபத்து அபாயத்தை அதிகரிக்கக்கூடும். எனவே டெஸ்லா தனது வாகனங்களை திரும்பப்பெறுகிறது


9. இந்தியாவில் 100 புதிய சைனிக் பள்ளிகளை அமைக்க பட்ஜெட் 2021-22 நாட்டில் முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.


10. ஸ்பெயினில் கொரோனாவுக்கு தடுப்பூசி கிடைப்பதில் தாமதங்கள் ஏற்படுவது தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தைத் தடுப்பதாக கவலைகள் எழுந்துள்ளன.   


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR