இந்தியாவை பிடிக்குமென்றால் அங்கேயே போய்விடுங்கள்: இம்ரான் கானை சாடிய நவாஸ் ஷரீப் மகள்
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு முன்னதாக மரியம் நவாஸ் ஷெரீப், “ஒருவர் இப்படி அதிகாரத்திற்காக அழுவதை நான் பார்ப்பது இதுவே முதல் முறை” என்று கூறினார்.
மிக அரிய நிகழ்வாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 8, 2022) அன்று இந்தியாவை புகழ்ந்தார். இதற்கு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் ஷெரீப், இம்ரான் கானை கடுமையாக சாடியுள்ளார்.
பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸின் (பிஎம்எல்-என்) துணைத் தலைவரான மரியம், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம், இந்தியாவை அவ்வளவு பிடிக்கும் என்றால், நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்குச் செல்லுமாறு கூறினார்.
"அதிகாரம் கையை விட்டு போவதைக் கண்டு ஒருவருக்கு பதற்றம் அதிகரித்துள்ளது. அவர் தன் கட்சியாலேயே வெளியேற்றப்படுகிறார். உங்களுக்கு இந்தியாவை மிகவும் பிடிக்கும் என்றால், அங்கு சென்று விடுங்கள், பாகிஸ்தானை விட்டு வெளியேறுங்கள்" என்று அவர் கூறியுள்ளார். இம்ரான் கான் தனது அண்டை நாடான இந்தியாவை "குதர் குவாம்" (மிகவும் சுயமரியாதை உள்ளவர்கள்) என்று பாராட்டியதை அடுத்து மரியம் நவாஸ் இவ்வாறு கூறியுள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு முன்னதாக, "ஒருவர் இப்படி அதிகாரத்திற்காக அழுவதை நான் பார்ப்பது இதுவே முதல் முறை" என்று அவர் கூறினார்.
கான், தனக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு முன்னதாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், எந்த வல்லரசும் இந்தியாவிற்கு விதிமுறைகளை ஆணையிட முடியாது என்றும், புது டெல்லி மற்றும் இஸ்லாமாபாத் இரண்டும் நல்ல உறவைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் ஒப்புக்கொண்டார்.
"இந்தியர்கள் குத்தர் குவாம் (மிகவும் சுயமரியாதை உள்ளவர்கள்). எந்த வல்லரசும் இந்தியாவிற்கு விதிமுறைகளை ஆணையிட முடியாது," என்று அவர் வெள்ளிக்கிழமை கூறினார். ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் மற்றும் காஷ்மீரில் நடந்த விஷயங்கள் ஆகியவற்றால் இந்தியாவுடனான பாகிஸ்தானின் உற்வௌகள் நன்றாக இல்லை என்பதில் தனக்கு ஏமாற்றம் உள்ளதாகவும் இம்ரான் கான் மேலும் தெரிவித்தார்.
மேலும் படிக்க | பாகிஸ்தான் அரசியல் நெருக்கடியும் பிற நாடுகள் மீது அதன் தாக்கமும்
இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து சுதந்திரம் பெற்றதாகவும், ஆனால் வெளிநாட்டு சக்திகள் இஸ்லாமாபாத்தை ஒரு டிஷ்யூ பேப்பராக பயன்படுத்தப்பட்டு தூக்கி எறிவதாகவும் இம்ரான் கான் குற்றம் சாட்டினார்.
எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்த துணை சபாநாயகரின் தீர்ப்பை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ரத்து செய்ததால், இம்ரான் கான் அரசு வியாழக்கிழமை பின்னடைவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் தேசிய சட்டமன்றம் கலைக்கப்படுவதையும், அடுத்தடுத்த அனைத்து முடிவுகளையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு ஏப்ரல் 9 ஆம் தேதி தேசிய சட்டமன்றக் கூட்டத்தை நடத்த உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியது.
மேலும் படிக்க | 26/11 சூத்திரதாரி ஹபீஸ் சயீத்துக்கு 31 ஆண்டு சிறை: பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR