காஷ்மீர் விவகாரம் உள்பட தற்போதைய விவகாரங்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசாங்கத்தின் பலவீனமான கொள்கைகளே காரணம் என பூட்டோ குற்றம் சாட்டியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கிய அரசியலமை சட்டபிரிவு 370 நீக்கத்திற்கு பின்னர், சர்வதேச அரங்கில் பிரச்சினையை எழுப்ப பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. அது மட்டுமல்லாமல், உலகளாவிய சமூகத்திலும் பாகிஸ்தான் தலைமை தொடர்ந்து சங்கடத்திற்கு ஆளாக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், தனது நாட்டில் எதிர்க்கட்சிகளின் இலக்கையும் இம்ரான் கான் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.


அந்த வகையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) தலைவர் பிலாவால் பூட்டோ, பிரதமர் இம்ரான் கானின் காஷ்மீர் கொள்கையை "தோல்வி"-யில் முடிந்துள்ளது என விமர்சித்துள்ளார். தற்போதைய விவகாரங்களுக்கு இம்ரான் கான் அரசாங்கத்தின் பலவீனமான கொள்கைகளை பூட்டோ குற்றம் சாட்டியுள்ளார்.


திங்களன்று நடைப்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பாகிஸ்தானின் பிரதான எதிர்க்கட்சியின் தலைவர் பூட்டோ, "முன்னதாக காஷ்மீர் குறித்த எங்கள் கொள்கை ஸ்ரீநகரை எவ்வாறு கைப்பற்றுவது என்பது பற்றியதாக இருக்கும், இப்போது அது முசாபராபாத்தை எவ்வாறு காப்பாற்றுவது என்பது பற்றியது" என தெரிவித்துள்ளார். முசாபராபாத் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் (PoK) தலைநகரம் ஆகும்.


காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் உலகம் முழுவதிலும் இருந்து உதவி கோரியுள்ளார், ஆனால் அவர் எல்லா இடங்களிலும் ஏமாற்றங்களையே பரிசாக பெற்று வருகிறார். பாகிஸ்தானின் உச்ச நட்பு நாடான சீனா அதை ஆதரிக்க மறுத்துவிட்டது, இந்தியாவுடனான உறவுக்கு இடையூறு இது அமைந்துவிடும் எனவும் அச்சப்படுகிறது. இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் அரசாங்கத்தை குறித்து எதிர்கட்சிகள் கடுமையான விமர்சனம் முன் வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.