இந்தியாவுடன் போர் மூளுமானால் நாங்கள் அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து, அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனை சர்வதேச சமுகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல பாகிஸ்தான் செய்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. இந்த விரக்தியில் பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் அவ்வப்போது கருத்துக்களை வெளிட்டு வருகின்றனர்.


இந்த நிலையில் இந்தியாவுடன் போர் மூளுமானால் நாங்கள் அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என இம்ரான்கான் தெரிவித்துள்ளார். லாகூரில் திங்களன்று சீக்கியர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவிக்கையில்., "இந்தியாவும் பாகிஸ்தானும் சம அளவு அணு ஆயுத பலம் கொண்ட நாடுகள். காஷ்மீர் தொடர்பாக தற்போது நிலவும் பதற்றம் அதிகரிக்கும் பட்சத்தில், உலகத்திற்கு அது பெரிய அச்சுறுத்தலாக அமையும்.


இருநாடுகளுக்கும் இடையே ஒருவேளை போர் மூளுமானல் எங்கள் தரப்பில் இருந்து நாங்கள் முதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்த மாட்டோம் என தெரிவித்துள்ளார்.


முன்னதாக அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற இந்தியாவின் கொள்கை எதிர்காலத்தில் சூழலுக்கு ஏற்ப மாறுபடக்கூடும் என்று கடந்த மாதம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது