ஈரானில் ஹிஜாப் தொடர்பாக நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க அரசாங்கம் தொடர்ந்து அடக்குமுறைகளை கடை பிடித்து வருகிறது. இந்நிலையில், போராட்டக்காரர் ஒருவருக்கு உள்ளூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. மேலும், பல போராட்டக்காரர்களுக்கு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. ஹிஜாப் பிரச்சினையில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை. ஈரானில் ஹிஜாப் அணிவதைக் கண்டித்து நீண்ட நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஹிஜாப் அணிவதை கட்டாயப்படுத்தும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஹிஜாப் அணியாததற்காக ஈரானில் கைது செய்யப்பட்ட மஹ்சா அமினி என்ற 22 வயது பெண், போலீஸ் காவலில் உயிரிழந்தார். இச்சம்பவத்திற்குப் பிறகு, போராட்டங்கள் தீவிரமடைந்தன. இந்த சட்டத்தை எதிர்த்து பெண்கள் சாலையில் போராட்டத்தில் இறங்கி ஹிஜாப்களை கழற்றியும், முடிகளை வெட்டியும் போராட்டம் நடத்தினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஈரானில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான வழக்கில் ஈரானின் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. இதில், போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 5 பேருக்கு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்ட எதிர்ப்பாளர் அரசாங்க கட்டிடத்திற்கு தீ வைத்த குற்றத்திற்காக குற்றவாளி என கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர, மேலும் 5 பேர் தேசிய பாதுகாப்பு விதிகளை மீறியதாகவும், சட்டம் ஒழுங்கை மீறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.


மேலும் படிக்க | தொடர்ந்து வலுக்கும் ஹிஜாப் போராட்டம்; 'குதிரை' படைகளை நிறுத்தியுள்ள ஈரான் அரசு!


ஈரானில் ஹிஜாப் அணியாதவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. ஈரானில் புரட்சி நீதிமன்றம் 1979ம் ஆண்டில் இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு உருவாக்கப்பட்டது. ஈரானின் இஸ்லாமிய சட்டங்களை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்காக இந்த நீதிமன்றம் அமைக்கப்பட்டது. ஹிஜாப் சட்டத்தை மீறியதற்காகவும் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ததற்காகவும் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் மீது வழக்குத் தொடரப்போவதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானிலும் இதுவரை நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஈரானில் ஹிஜாப் சட்டத்திற்கு எதிராக கடந்த இரண்டு மாதங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 22 வயதான மெஹ்சா அமினி ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் காவலில் அவர் சந்தேக மரணமடைந்ததையடுத்து, நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிவது சட்டப்படி கட்டாயமாகும். தவறினால் கடுமையான தண்டனை விதிக்கப்படும்.


ஆர்ப்பாட்டங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர். ஈரானில் நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்கு கலாச்சார காவலர்கள் மிருகத்தனமன ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை குறைந்தது 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வன்முறைச் சம்பவங்களில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 40 பேர் உயிரிழந்துள்ளனர். மக்களின் தீவிர போராட்டத்தினால், ஈரான் அரசாங்கமும் மோசமாக சிக்கியுள்ளத. இந்த ஆர்ப்பாட்டங்கள் அரசுக்கு எதிராக ஒரு பெரிய சவாலாக உருவெடுத்துள்ளன என்ரால் மிகையில்லை.


மேலும் படிக்க | ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்! மக்கள் மீது துப்பாக்கிச்சூடு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ