தூக்கிலிட  வரிசையில் காத்திருந்த ஒரு ஈரானிய பெண் தனக்கு முன் 16 ஆண்கள் தூக்கிலிடப்பட்டு இறப்பதைப் பார்த்தபோது, அதிர்ச்சியில் மாரடைப்பு  எற்பட்டு இறந்தார். ஆனாலும் அவரது உடல் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஈரானில் (Iran) தனது கணவர் அலிரெஸா ஜமானி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜஹ்ரா இஸ்மாயிலி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, ராஜாய் ஷாஹர் சிறையில் தூக்கிலிடப்பட்டார்.


புலனாய்வு அமைச்சகத்தின் மூத்த அதிகாரியாக இருந்த தனது கணவரை கொலை செய்ததாக தாய் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதாக டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.



அவரது வழக்கறிஞர் ஓமிட் மொராடி, தனது கணவர் தன்னையும் அவர்களது மகளையும் மிகவும் துண்புறுத்தியதாகவும், அதனால் தற்காப்புக்காக இந்த ஈரானிய பெண் தாக்கியதாக கூறினார்.


இஸ்மாயிலியின் இறப்புச் சான்றிதழ் அவரது மரணத்திற்கான காரணத்தை “மாரடைப்பு” என்று கூறுகிறது என ஈரான் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு (HRM) கூறியுள்ளது.


அவரது வழக்கறிஞர் ஓமிட் மொராடி  “மாரடைப்பு தான் மரணத்திற்கு காரணம் என்று அறிக்கை கூறுகிறது, ஏனெனில் நேற்று 16 ஆண்கள் அவரது கண்களுக்கு முன்பாக தூக்கிலிடப்பட்டனர். இதை பார்த்த சஹ்ராவின் இதயம் அச்சத்தில் நின்றுவிட்டது, அவர் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு அவர் இறந்தார். " என்றார்.


சீனாவுக்கு (China) அடுத்தபடியாக , இஸ்லாமிய நாடான ஈரானில் மிக அதிக அளவில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் 2019 அறிக்கை கூறுகிறது.  


 இருப்பினும், ஈரானினில், ஒரே நாளில் 17 பேருக்கு பொது இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றுவது சாதாரணமான விஷயம் என கூறப்படுகிறது.


ALSO READ | டிரம்ப் தனது Air Force One விமானத்தில் கிம் ஜாங் உன்னை அழைத்து செல்ல விரும்பினாரா..!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR