இஸ்ரேல் தேர்தலில் இழுபறி நிலை; கிங் மேக்கராக உருவெடுக்கும் Raam
இஸ்ரேலில் நடைபெற்ற தேர்தல்களில் யாருக்கும் அருதி பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலையில், தி யுனைடட் அரேப் லிஸ்ட் கட்சி (The United Arab List ) என்ற அரபு கட்சி கிங்மேக்கர் ஆக உருவெடுத்துள்ளது.
டெல் அவிவ் (Tel Aviv): யூத நாடான இஸ்ரேலில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நான்காவது முறையாக தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த மூன்று தேர்தல்களில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. இந்நிலையில், நான்காவது முறையாக நடைபெற்ற தேர்தலிலும் இதே நிலை தான் தொடரும் என்ன நிலை உள்ளது.
எனினும், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) லிகுட் ( Likud) கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும், பெரும்பான்மைக்கு சிறிது குறைவான இடங்களில் தான் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 90 சதவீத வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற நிலையில், நெத்தன்யாகுவின் கட்சி 59 இடங்களை வென்றதாக கூறப்படுகிறது. பெரும்பான்மை பெற மேலும் 2 இடங்களில் வெல்ல வேண்டும்.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உள்ல மொத்தம் 120 இடங்களில், தற்போதைய நிலவரப்படி, பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) லிக்குட் கட்சி மற்றும் அவரது கூட்டாளிகள் மொத்தம் 59 இடங்களைப் பெறுவதாகத் தெரிகிறது. அத்தகைய சூழ்நிலையில், அவருக்கு மேலும் 2 இடங்கள் கிடைத்தால், அவர் மீண்டும் நாட்டின் பிரதமராக ஆகலாம்.
இஸ்ரேல் தேர்தல்களில், அங்கு ஒரு அடிப்படைவாத இஸ்லாமிய கட்சியின் 5 இடங்களை வென்றது பலருக்கு ஆச்ச்ர்யத்தை கொடுத்துள்ளது. இந்த இஸ்லாமிய கட்சியின் பெயர் ஐக்கிய அரபு பட்டியல். இஸ்ரேலின் மொழியான எபிரேய மொழியில், இந்த கட்சி 'ராம்' (Raam) என்று அழைக்கப்படுகிறது.
ALSO READ | இத்தாலிய செய்தி நிறுவனங்கள் -Google இடையே கையெழுத்தானது ஒப்பந்தம்
இதுவரை நடந்த தேர்தல் போக்குகளின்படி, பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சிக்கு 59 இடங்களும், எதிர் கட்சிக்கு 56 இடங்களும் கிடைத்துள்ளன. இத்தகைய சூழ்நிலையில், அரசாங்கத்தை அமைப்பதற்கு 61 இடங்களை தேவை என்ற நிலையில், 'ராம்' கட்சியின் ஆதரவு தேவை என்ற நிலை உருவாகியுள்ளது.
'ராம்' கட்சி கிங்மேக்கர் ஆக உருவெடுத்தாலும், இரு முக்கிய யூதக் கட்சிகளும், இஸ்லாமிய கட்சியுடன் இணைவது அவ்வளவு எளிதானது அல்ல. இஸ்ரேலின் இரு முக்கிய கட்சிகளும் நாட்டில் குடியேறிய யூத மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இஸ்லாமிய கட்சி தி யுனைடட் அரேப் லிஸ்ட் கட்சி, சிறுபான்மையினத்தவர்களாக உள்ள இஸ்ரேலில் குடியேறிய முஸ்லிம்களின் நலன்களை முன்னிலைப்படுத்துகின்றன. மேலும் பாலஸ்தீனத்திற்கு மிக நெருக்கமாக இருக்கின்றனர்.
பெஞ்சமின் நெதன்யாகு தேசியவாத சித்தாந்தத்திற்கு மிகவும் பிரபலமானவர். பாலஸ்தீனியர்களுக்கு விடுதலை அளிப்பதற்கும், காசா பகுதியில் இஸ்ரேலிய காலனிகளை ஏற்படுத்துவதற்கும் எதிராக இருந்தார். அதே நேரத்தில், இஸ்லாமிய கட்சி 'ராம்' (ராம்) கட்சி பெஞ்சமின் நெதன்யாகுவின் கொள்கைகளை எதிர்த்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், கருத்தியல் வேறுபாடுகளை மறந்து, இரு கட்சிகளும் ஒரே தளத்திற்கு வர முடியுமா என்ற கேள்வி எழுகிறது. பெஞ்சமின் இந்த கேள்விக்கான பதிலில் நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலம் உள்ளது.
ALSO READ | ஜப்பானை நோக்கி ஏவுகணை ஏவிய கிம் ஜாங் உன்; அமெரிக்காவிற்கு சவால் விடுகிறாரா?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR