அசத்தலான வீடுகள் ₹100 விலையில்... .ஆனாலும் வாங்க ஆளில்லை...!!!
இத்தாலியில் வீடு வாங்க நினைப்பவர்களுக்கு, இதைவிட சிறந்த வாய்ப்பு இல்லை என கூறலாம். ஏனென்றால், நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு வீடுகள் மிகவும் மலிவாக கிடைக்கும்.
சொந்த வீடு என்பது பலருக்கும் கனவு. குறைந்த விலைக்கு வீடு கிடைத்தால் யார்தான் வேண்டாம் என்று சொல்வார்கள்
இத்தாலியில் வீடு வாங்க நினைப்பவர்களுக்கு, இதைவிட சிறந்த வாய்ப்பு இல்லை என கூறலாம். ஏனென்றால், நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு வீடுகள் மிகவும் மலிவாக கிடைக்கும். இந்த வீடுகள் இத்தாலியில் புக்லியாவின் தென்கிழக்கில் பிக்காரியில் விற்பனைக்கு வந்துள்ளன. நகரின் மேயர் ஜியான் பிலிப்போ மிக்னெகன் என்பவர், இந்த மலிவு விலை வீடு விற்பனைக்கான சிறப்பு திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
Biccari (Italy) நகரில் காலியாக உள்ள வீடுகளின் எண்ணிக்கை அதிகம். ஒரு காலத்தில் பிக்காரியில் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்தனர். ஆனால் இப்போது அந்த எண்ணிக்கை 2000 ஆக குறைந்துள்ளது என்று மேயர் கூறினார்.வேலைவாய்ப்பு மற்றும் பிற காரணங்களுக்காக மக்கள் பிற இடங்களுக்கு, குறிப்பாக அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டனர்.
ALSO READ | X-ray கொடுத்த ஷாக்... பிறப்பில் தான் ஆண் என்பதை அறிந்த மணமான பெண் அதிர்ச்சி..!!
இதற்கு முன்பு விடுமுறை காலத்திலாவது, மக்கள் தங்கள் வீடுகளுக்கு வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது அவர்கள் ஒரேயடியாக நகரத்தை விட்டு வெளியேறுகிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு, மக்களை ஈர்க்கும் நோக்கில் மேயர் கியான்ஃபிலிப்போ மிக்னோக்னா, இந்த சிறப்பு திட்டத்தை கொண்டு வந்துள்ளார். ஆனாலும், மக்கள் இங்கே வீடுகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வீடுகள் குறித்த தகவல்கள் விரைவில் டவுன்ஹால் வலைத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வீடு வாங்க விரும்புவோர் மேயரின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலையும் தொடர்பு கொள்ளலாம்.
இந்த வீடுகள் மிகவும் பழைய வீடுகள். அதனால், அவை புதுப்பிக்கப்பட வேண்டும்.
பிக்காரி ஒரு அழகான நகரம். இந்த நகரம் புக்லியா, மோலிசா மற்றும் காம்பானியா ஆகிய நகரங்களை எல்லைகளாக கொண்டுள்ளது. அங்கிருந்து பார்க்கும் போது அழகான நதி மற்றும் மலைத்தொடர்களைக் காணலாம்.
ALSO READ | செவ்வாய் கிரக மர்ம பூட்டின் சாவி சால்டா ஏரியில் உள்ளது: NASA விஞ்ஞானிகள்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR