மால்டா : வீட்டில் மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கஞ்சா பயன்படுத்துவதை முதல் முறையாக ஐரோப்பிய நாடான மால்டா சட்டபூர்வமாக்கி உள்ளது.  கஞ்சா வைத்திருப்பதையும், பயன்படுத்துவதையும் குற்றமாக கருதும் நிலையில் இதனை பயன்படுத்துவதை மால்டா நாடு சட்டபூர்வமாக்கியுள்ளது.  இதுகுறித்து பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று நடந்த கூட்டத்தில் குறைந்த அளவு மரிஜுவானாவை (marijuana) வளர்க்கவும், வைத்திருக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | Antarctica: உலகிற்கே ஆச்சுறுத்தலாக உருவெடுக்கும் பனிப்பாறை விரிசல்கள்


இதன் அடிப்படையில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் 7 கிராம் அளவு கஞ்சாவை வைத்திருக்கலாம், மேலும் நான்கு கஞ்சா செடிகளுக்கு மேல் வீட்டில் வளர்க்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதாவிற்கு 36 வாக்குகள் சாதகமானதாகவும், 27 வாக்குகள் எதிரானதாகவும் இருந்தது.  இந்த சட்டத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் தற்போது சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.



அதன்படி, பொது இடங்களில் புகைபிடித்தால் €235 அபராதம் விதிக்கப்படும், அதேபோல 18 வயதுக்கு குறைவான குழந்தைகள் முன்னிலையில் கஞ்சா புகைப்பவர்களுக்கு €500 வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.  கஞ்சா பயன்படுத்தும் சிறுவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்படாமல் அவர்களுக்கு உரிய விழிப்புணர்வும், சிகிச்சையும் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.


மேலும் ஜெர்மனி, லக்ஸம்பர்க், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா, மெக்சிகோ, ஜமைக்கா, போர்ச்சுகல் மற்றும் பல அமெரிக்காவின் பல இடங்களில் ஏற்கனவே இதேபோன்ற சட்டத்தை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இத்தாலி அடுத்த ஆண்டு கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாக்கும் முயற்சியில் ஈடுபடும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.


ALSO READ | தடுப்பூசி செலுத்தாவிட்டால் பணிநீக்கம்; கூகுள் எச்சரிக்கை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR