சவுதி அரேபியாவில் மரண தண்டனை: நெஞ்சை உலுக்கும் செய்தி ஒன்று சவுதி அரேபியாவில் இருந்து வெளியாகியுள்ளது. சவூதி அரேபிய அரசின் உத்தரவின் பேரில் கடந்த 10 நாட்களில் அங்கு 12 பேர் தலை துண்டிக்கப்பட்டுள்ளனர். சவூதி அரேபியாவில் குற்றங்கள் தொடர்பாக பல கடுமையான சட்டங்கள் உள்ளன. இதன் காரணமாக கடந்த 10 நாட்களில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சவூதி அரேபியாவில் சில காலமாக அரசு தரப்பில் கடுமையான தண்டனைகள் தொடர்பாக தளர்வு செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரில் பெரும்பாலானோர் வாளால் தலை துண்டிக்கப்பட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

12 பேருக்கு கொடூர தண்டனை


சவூதி அரேபியாவில் 12 பேருக்கு இப்படி ஒரு பயங்கரமான தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக டெலிகிராப் நாளிதழில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளது. இங்கு கடந்த 10 நாட்களில் 12 பேர் தலை துண்டிக்கப்பட்டுள்ளனர். சவுதி அரேபிய அரசின் உத்தரவின் பேரில் தலை துண்டிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இவர்கள் செய்த குற்றம் போதைப்பொருள் வழக்குடன் தொடர்புடையது. இவர்கள் போதைப்பொருள் தொடர்பான சட்டங்களை மீறியுள்ளனர்.


தண்டனை பெற்றவர்களில் இந்த நாடுகளின் குடிமக்களும் அடங்குவர்


சவுதி அரேபியாவில் கடந்த 10 நாட்களில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரில் 3 பேர் சவுதி குடிமக்கள். இது தவிர, நான்கு சிரியா, 2 ஜோர்டான் மற்றும் 3 பாகிஸ்தானிய குடிமக்கள் அதில் அடங்குவர். இவர்களுக்கு சவூதி அரேபியாவில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கொடூரமான தண்டனை வழங்கப்பட்டது.


மேலும் படிக்க |  வொர்க் ப்ரம் ஹோம் இனி கிடையாது... அதிரடி காட்டும் எலான் மஸ்க்!


இதுவரை பலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது


சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது. சவூதி அரேபியாவில் இந்த வருடத்தில் இதுவரை 132 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மிரர் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளை விட அதிகமாகும். இருப்பினும், சவுதி அரேபியாவின் கடுமையான சட்டங்கள் மற்றும் அங்கு வழங்கப்படும் பயங்கரமான தண்டனைகள் குறித்து உலகம் முழுவதும் தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.


மேலும் படிக்க | இந்தியாவில் ட்விட்டர் ப்ளூ டிக் - கட்டண விவரம் அறிவிப்பு!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ