ரியாத்: கொரோனா தொற்றுநோய் காரணமாக இந்த முறை ஹஜ் யாத்திரை  பல வகைகளில் வித்தியாசமாக உள்ள நிலையில், மேலும் ஒரு வித்தியாசமான நடவடிக்கையாக பெண் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சவூதி அரேபியாவின் மக்காவில் முதல் முறையாக ஒரு பெண் காவலர் பணியில் நிறுத்தப்பட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆயிரக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பிற்கு பொறுப்பான சவுதி பெண்கள் சிப்பாய்கள் குழுவிலும் மோனா சேர்க்கப்பட்டுள்ளார். தனது தந்தையின் பணியில் ஈர்க்கப்பட்ட மோனா இராணுவத்தில் சேர்ந்தார்.  இன்று அவர் இஸ்லாம் மத புனித இடத்தில் நிறுத்தப்பட்டுள்ள முதல் பெண்கள் அணியின் ஒரு பகுதியாக உள்ளார்.


ஏப்ரல் முதல், மக்கா மற்றும் மதீனாவுக்கு வருகை தரும் யாத்ரீகர்களுக்கான பாதுகாவல் பணியில் 12 பெண் வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது. மோனா மெக்காவில் ஷிப்டுகளில் பணிபுரிகிறார், மசூதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ஹஜ் யாத்ரீகர்களுக்கான வசதிகளை கவனித்து வருகிறார். இது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மோனா, "எனது பணியில் சிறந்து விளங்க மறைந்த தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறேன். அதனால்தான் நான் மெக்காவின் இந்த புகழ்பெற்ற மசூதியில் இன்று நிற்கிறேன். இங்கு வரும் பக்தர்களுக்கு சேவை செய்வது ஒரு கெளரவமான மற்றும் பொறுப்பான வேலை.


ALSO READ | Alcatraz Prison: உலகின் பயங்கரமான, மர்மமான சிறைச்சாலை


உளவியல் படித்த மோனா, இராணுவத்தில் சேர குடும்பம் தன்னை ஆதரித்ததாக கூறுகிறார். மதத்திற்கு சேவை செய்வதும், நாட்டுக்கு சேவை செய்வதும், அல்லாவை தொழ வருபவர்களுக்கு சேவை செய்வதும் அவர்களுக்கு பெருமை அளிக்கும் விஷயம் என்று அவர்கள் நம்புகிறார்கள். சவூதி  இளவரசர் முகமது பின் சல்மான் சவுதியில் பல சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை வலியுறுத்தியுள்ளார். மெக்காவில் (Mecca) சவுதி பெண்கள் சிப்பாய்கள் குழுவை நிறுத்துவது இதன் ஒரு பகுதியாகும். இருப்பினும், இந்த சீர்திருத்தங்களின் உண்மையான நோக்கம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதாகும்.


இளவரசரின் விஷன் 2030 திட்டம்


சவுதி  இளவரசரின் இந்த சீர்திருத்த செயல்முறைகளுக்கு விஷன் 2030 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் கீழ், பெண்கள் மீது விதிக்கப்பட்ட பல கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன. இப்போது இங்கே வயது வந்த பெண்கள் தங்கள் உறவினர்களின் அனுமதியின்றி எங்கும் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இது போன்ற இன்னும் சில மேம்பாடுகளை எதிர்வரும் காலங்களில் காணலாம் என்று நம்பப்படுகிறது.


ALSO READ | நீங்களும் விண்வெளிக்கு இலவசமாக பயணிக்கலாம்; பொன்னான வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR