ஹகியா சோபியாவிற்கு பிறகு, கோரா தேவாலயத்தை மசூதியாக மாற்றிய துருக்கி அதிபர்
ஹாகியா சோபியாவுக்குப் பிறகு, துருக்கி அதிபர் எர்டோகன், பல நூற்றாண்டு கால பழமையான பைசண்டைன் ஆட்சி காலத்தை சேர்ந்த கோரா தேவாலயத்தை மசூதியாக மாற்றினார்.
ஹாகியா சோபியாவுக்குப் பிறகு, துருக்கி அதிபர் எர்டோகன், பல நூற்றாண்டு கால பழமையான பைசண்டைன் ஆட்சி காலத்தை சேர்ந்த கோரா தேவாலயத்தை மசூதியாக மாற்றினார்.
துருக்கிய அதிபர் தயிப் எர்டோகன் இஸ்தான்புல்லின் மிகவும் புகழ்பெற்ற பைசண்டைன் ஆட்சி கால கட்டிடங்களில் ஒன்றான வரலாற்று சிறப்பு மிக்க சோரா தேவாலயத்தை வெள்ளிக்கிழமை ஒரு மசூதியாக மாற்றினார். ஒரு மாதம் முன்பு புகழ்பெற்ற ஹாகியா சோபியாவை தொழுகைக்காக திறந்து விட்டார்.
ஹாகியா சோபியாவை சமய சார்பற்ற அருங்காட்சியமாக மாற்ற 1934 ஆம் ஆண்டு போடப்பட்ட உத்தரவை, உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, முஸ்லிம்கள் தொழுகை நடத்த திறந்து விடப்பட்டது.
கான்ஸ்டான்டினோப்பிளின் பண்டைய நகரச் சுவர்களுக்கு அருகே கட்டப்பட்ட கோராவில் உள்ள இந்த தேவாலயம், 14 ஆம் நூற்றாண்டின் பைசண்டைன் ஆட்சி காலத்தின் மொசைக் கற்கள் மற்றும் விவிலியக் கதைகளின் காட்சிகளைக் எடுத்துக் காட்டும் ஓவியங்களைக் கொண்டுள்ளது.
1453 ஆம் ஆண்டில் முஸ்லீம் ஒட்டோமான்களால் நகரம் கைப்பற்றப்பட்ட பின்னர் ஹாகியா சோபியாவைப் போலவே , 70 ஆண்டுகளுக்கு முன்பு துருக்கியின் மதச்சார்பற்ற குடியரசால் இந்த கட்டிடம் ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.
அரசியல் ரீதியாக வலுவாக உள்ள எர்டோகன், துருக்கியின் அடிப்படைவாத முஸ்லிம்களின் தலைவனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். கடந்த மாதம் 86 ஆண்டுகளுக்கு பிறகு, ஹாகியா சோபியாவில் நடந்த முதல் தொழுகையில், பல்லாயிரக்கணக்கானவர்களுடன் கலந்து கொண்டார்.
இந்த நடவடிக்கையை தேவாலயத் தலைவர்களும், சில மேற்கத்திய நாடுகளும் கடுமையாக விமர்சினம் செய்தனர். ஹாகியா சோபியாவை முஸ்லீம் தொழுகைக்காக திறந்து விடுவது மத பிளவுகளை தீவிரப்படுத்தும் அபாயம் இருப்பதாகக் கூறினர்.
கடந்த ஆண்டு ஒரு துருக்கிய நீதிமன்றம், 1945 ஆம் ஆண்டில் கோராவை அருங்காட்சியகமாக மாற்றுவதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசின் உத்தரவை ரத்து செய்தது.
வெள்ளிக்கிழமை, எர்டோகன் கையெழுத்திட்டு துருக்கியின் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிடப்பட்ட உத்தரவில் கோரா இனி தொழுகைக்காக திறந்து விடப்படும் என அறிவித்தார்.
4 ஆம் நூற்றாண்டில் இந்த தேவாலயம் முதன்முதலில் கட்டப்பட்டது, ஆனால் தற்போதுள்ள பெரும்பாலான பகுதிகள் 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. பூகம்பம் ஏற்பட்டு பல பகுதிகள் இடிந்து விட்டதால், 200 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கட்டப்பட்டது.
சோராவில் முதல் முஸ்லீம் தொழுகை எப்போது நடைபெறும், அல்லது அங்குள்ள கிறிஸ்தவ கலைப்படைப்புகளுக்கு என்ன செய்யப்படும் என்பது தொடர்பாக எர்டோகனின் வெளியிட்ட உத்தரவில் எந்த தகவலும் இல்லை.
ALSO READ | Hagia Sophia: சர்ச்-மசூதி-யுனெஸ்கோ பாரம்பரிய அருங்காட்சியகம்-மசூதி
ஹாகியா சோபியாவில், தேவாலயத்தில் வழிபடும் அன்னை மேரி மற்றும் குழந்தை இயேசுவின் படங்களுக்கு முன் திரைச்சீலைகள் போடப்பட்டுள்ளன.