ஈரானின் சபஹர் துறைமுக ஒப்பந்தம் (Chabahar Port) தொடர்பாக இந்தியா மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இந்தியாவும் ஈரானும் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இந்த ஒப்பந்தம் தொடர்பாக முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், சபாஹார் துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தை இரு நாடுகளும் இறுதி செய்துள்ளன. இந்தியாவில் பொதுத் தேர்தலுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என கூறப்படுகிறது. தேர்தலுக்குப் பிறகு, இந்திய கப்பல் துறை அமைச்சர் தலைமையிலான உயர்மட்டக் குழு ஈரானுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தகவலை புதுதில்லியில் உள்ள ஈரான் தூதரகம் உறுதி செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இறுதி கட்டத்தில் உள்ள சபஹார் துறைமுக ஒப்பந்தம்


சிஸ்தான்-பலூசிஸ்தான் கடலில் அமைந்துள்ள இந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சபஹார் துறைமுக ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் உள்ளது என்று ஈரான் (Iran) தூதரகத்தின் பிரதிநிதி கூறினார். இந்தியக் குழு ஈரானுக்குச் செல்வதற்காக தாங்கள் காத்திருப்பதாக கூறிய ஈரானிய தூதரக செய்தித் தொடர்பாளர் மஹ்தி அஸ்பந்தியாரி, இந்த ஒப்பந்தம் இரு தரப்புக்கும் ஆதாயம் தரும் பயனுள்ள ஒப்பந்தம் என்றார். எனினும், ஒப்பந்தம் குறித்த கூடுதல் விவரங்களை அளிக்க அவர் மறுத்துவிட்டார். ஈரான் மற்றும் இந்தியா இடையேயான இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | இந்தியாவின் மீன் கறி மசாலாவில் நச்சுப் பொருள்...? திருப்பி அனுப்பும் சிங்கப்பூர் - முழு விவரம்!


சபஹர் துறைமுகத்தின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்புக்கு உதவ இந்தியா ஒப்புதல்


கடந்த 2003ம் ஆண்டு ஈரான் அதிபர் முகமது கடாமி, இந்தியா (India) வந்த போது, ​​சபாஹார் துறைமுகம் தொடர்பாக புதுடெல்லி மற்றும் தெஹ்ரான் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் கீழ், சபஹர் துறைமுகத்தின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்புக்கு உதவ இந்தியா ஒப்புக்கொண்டது. ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவின் சந்தைகளுக்கு இந்தியப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான நுழைவுப் புள்ளியாக இருக்கும் சபஹர் துறைமுகம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதே சமயம், ஈரானின் கடல் வர்த்தகத்தில் 80 சதவீதம் இந்த துறைமுகம் மூலம் நடைபெறுகிறது என்பதால், இந்த துறைமுகம் ஈரானுக்கும் மிகவும் முக்கியமானது. இது தவிர, சபஹர் துறைமுகம் முழு அளவில் செயல்பாட்டுக்கு வருவதால், ஹார்முஸ் ஜலசந்தியின் மீதான அழுத்தமும் குறையும். இருப்பினும், சபஹர் துறைமுக பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் முன்னேறவில்லை.


ஒப்பந்தம் 10 ஆண்டுகள் நீடிக்கும் என நிபுணர்கள் கருத்து


இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, துறைமுகத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியாவும் ஈரானும் தயாராக உள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் 10 ஆண்டுகள் நீடிக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுவரை, இரு தரப்பினரும் குறுகிய கால ஒரு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். நீண்ட கால ஒப்பந்தம் குறித்த பேச்சுக்கள் நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பான கருத்து வேறுபாடுகளால் நிறைவேறாமல் இருந்தது. ஆனால் இப்போது இரு தரப்பினரும் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வர்த்தகச் சட்டத்தின் விதிகளின்படி நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


சாபஹாரின் ஷாஹித் பெஹெஸ்தி முனைய மேம்பாடு


சாபஹாரின் ஷாஹித் பெஹெஸ்தி முனையத்தின் மேம்பாட்டிற்காக 85 மில்லியன் டாலர் முதலீடு செய்யவும் இந்தியா ஒப்புக்கொண்டது. இருப்பினும், அணுசக்தித் திட்டம் தொடர்பாக ஈரான் மீது மேற்கு நாடுகள் தடைகளை மீண்டும் விதித்ததுள்ளதால், துறைமுகத்தை மேம்படுத்தும் இந்தியாவின் முயற்சி தடை பட்டுள்ளது. இதுவரை, துறைமுகத்தை மேம்படுத்த 25 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆறு மொபைல் துறைமுக கிரேன்களை மட்டுமே இந்தியா வழங்க முடிந்தது.


மேலும் படிக்க | பாரபட்சம் காட்டும் நெஸ்லே... இந்தியாவில் விற்கப்படும் குழந்தை உணவுகளில் சர்க்கரை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ