பாரபட்சம் காட்டும் நெஸ்லே... இந்தியாவில் விற்கப்படும் குழந்தை உணவுகளில் சர்க்கரை!

இந்தியாவில் குழந்தைகளுக்கான உணவில் பன்னாட்டு நிறுவனமான நெஸ்லே நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம், செரிலாக் என்ற பெயரில் குழந்தைகள் உணவை விற்பனை செய்து வருகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 18, 2024, 04:52 PM IST
  • பப்ளிக் ஐ வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை
  • சர்வதேச வழிகாட்டுதல்கள் மீறப்பட்டுள்ளதாக புகார்
  • முக்கிய சந்தைகளில் விற்கப்படும் 115 தயாரிப்புகள்.
பாரபட்சம் காட்டும் நெஸ்லே... இந்தியாவில் விற்கப்படும் குழந்தை உணவுகளில் சர்க்கரை! title=

இந்தியாவில் குழந்தைகளுக்கான உணவில் பன்னாட்டு நிறுவனமான நெஸ்லே நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம், செரிலாக் என்ற பெயரில் குழந்தைகள் உணவை விற்பனை செய்து வருகிறது. நெஸ்லே வளரும் நாடுகளில் விற்கப்படும் அதன் குழந்தை உணவில் அதிக சர்க்கரை சேர்ப்பதாக வந்துள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 Cerelac குழந்தை உணவுகள்

கார்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நெஸ்லே இந்தியா குழந்தைக்கான பால், செரிலாக் போன்ற உணவு பொருட்களில் அதிக சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் பரிசோதிக்கப்பட்ட அனைத்து Cerelac குழந்தைத் தானியப் பொருட்களிலும் சர்க்கரை சேர்க்கப்பட்டு, ஒரு கப் அளவிற்கு சராசரியாக மூன்று கிராம்கள் என்ற அளவிற்கு சேர்க்கப்படுவதாக கண்டறிந்துள்ளது.

பப்ளிக் ஐ வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை

சுவிஸ் புலனாய்வு அமைப்பான பப்ளிக் ஐ வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், இந்தியா உள்ளிட்ட ஏழை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் விற்கப்படும் குழந்தை உணவில் நெஸ்லே சர்க்கரையை சேர்ப்பதாகவும், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் பிற வளர்ந்த நாடுகளில் விற்கப்படும் அதே குழந்தை உணவுகளில் பூஜ்ஜியம் என்ற அளவில் சர்க்கரை சேர்க்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

சர்வதேச வழிகாட்டுதல்கள் மீறப்பட்டுள்ளதாக புகார்

புலனாய்வு அமைப்பு மேற்கொண்ட சோதனையின் முடிவில் அதிர்ச்சியளிக்கும் விதமாக இந்தியா, ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளில் விற்கப்படும் நெஸ்லேவின் குழந்தைகளுக்கான பால் மற்றும் தானிய பொருள்களில் சர்க்கரை மற்றும் தேனை நிறுவனம் சேர்த்துள்ளது தெரியவந்தது. இதன் மூலம் உடல் பருமன் மற்றும் நாள்பட்ட நோய்களைத் தடுப்பதற்கான சர்வதேச வழிகாட்டுதல்கள் மீறப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | அடிடாஸ் ஷூவால் ஏற்பட்ட சிக்கல்... மன்னிப்பு கோரிய ரிஷி சுனக்!

முக்கிய சந்தைகளில் விற்கப்படும் 115 தயாரிப்புகள்

பப்ளிக் ஐ மற்றும் இன்டர்நேஷனல் பேபி ஃபுட் ஆக்ஷன் நெட்வொர்க் (IBFAN) ஆகியவற்றின் தரவை மேற்கோள் காட்டி, கார்டியன் பத்திரிக்கை, செரிலாக் மற்றும் நோடி பிராண்டுகளில் கவனம் செலுத்தி, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள நெஸ்லேவின் முக்கிய சந்தைகளில் விற்கப்படும் 115 தயாரிப்புகளை ஆய்வு செய்த பின்னர் ஆய்வு முடிவுகளை அறிவித்தது.

ஒரு செர்விங்கிற்கு சராசரியாக 3 கிராம் சர்க்கரை 

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து 15 செரிலாக் குழந்தை தயாரிப்புகளிலும், ஒரு செர்விங்கிற்கு சராசரியாக 3 கிராம் சர்க்கரை இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் எத்தியோப்பியா மற்றும் தாய்லாந்தில், ஒரு செர்விங்கிற்கு கிட்டத்தட்ட 6 கிராம் சர்க்கரையை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதே தயாரிப்புகள் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தில் சர்க்கரையே சேர்க்கப்படாமல் விற்கப்படுகிறது.

மேலும் படிக்க | ஹோட்டலில் மிஞ்சிப்போன உணவை சாப்பிட்டு... லட்சக்கணக்கில் பணத்தை சேமித்த ஐடியா மணி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News