உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலில், உக்ரேனிய நகரமான புச்சாவில் பொதுமக்கள் படுகொலைகள் தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா,  இது தொடர்பாக சுயேச்சையான விசாரணை தேவை எனக் கூறியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, “ஐநா கவுன்சிலில் கடைசியாக இந்தப் பிரச்சினையைப் பற்றி விவாதித்ததிலிருந்து உக்ரைனின் நிலைமையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லை. அங்கே பாதுகாப்பு நிலைமை மோசமடைந்துள்ளது. மனித உரிமைகள் மீறல் நடந்துள்ளது. ” என்று  தெரிவித்தார்.


 ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் குறித்த கூட்டத்தில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முதல் முறையாக உரையாற்றினார். கிவ்வின் புறநகரில் புச்சாவின் தெருக்களில் மக்கள் இறந்து கிடக்கும் படங்கள் மற்றும் காணொளிகள்  உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வெட்டப்பட்ட உடல்களின் கொடூரமான படங்கள், மொத்தமாக சடலங்கள் புதைக்கப்பட்ட சம்பவங்கள் ஆகியவை வெளிவந்ததை அடுத்து,  இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என உலக அளவில்  கோரிக்கைகள் வலுபெற்றுள்ளன. 


மேலும் படிக்க | உக்ரைனின் புச்சா நகரத்தில் இனப்படுகொலை நடத்தப்பட்டுள்ளது: வோலோடிமிர் ஜெலென்ஸ்கி


உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடரும் நிலையில், உக்ரைனின் கிவ் பிராந்தியத்தில் உள்ள புச்சா நகரில் வீதியில் காணப்படும் உடல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. முன்னதாக, வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, கிவ் பிராந்தியத்தில் உள்ள புச்சா நகருக்கு  சென்று பார்வையிட்ட போது, அங்கு ரஷ்ய துருப்புக்களிடமிருந்து மீட்கப்பட்ட  அந்த பிரதேசத்தில்  சாலையில் கிடக்கும் சடலங்கள், படுகொலைகள் நடத்தப்பட்டதற்கு சாட்சியாக இருப்பதாக குறிப்பிட்டார். 



மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR