Bhutanஇல் இந்திய நீர்மின் திட்ட கட்டுமானத்திற்கு Brunel Medal-2020
பூட்டானில் இந்தியா கட்டமைத்த மங்தேச்சு நீர்மின் திட்டத்திற்கு பிரிட்டனின் மதிப்புமிகு விருது கிடைத்துள்ளது.
பூட்டானில் இந்தியா கட்டமைத்த மங்தேச்சு நீர்மின் திட்டத்திற்கு பிரிட்டனின் மதிப்புமிகு விருது கிடைத்துள்ளது.
இந்தியா பூட்டானில் கட்டிய (Mangdechhu Hydroelectric project) மங்தெச்சு நீர் மின் திட்டத்திற்கு Brunel Medal-2020 வழங்கி பெருமை படுத்தப்பட்டுள்ளது, இது இங்கிலாந்தின் உயர்மட்ட பொறியியல் அமைப்பான சிவில் இன்ஜினியர்களின் நிறுவனம் வழங்கும் விருது. 19 ஆம் நூற்றாண்டின் பொறியியல் ஜாம்பவான்கள் என அழைக்கப்படும் இசம்பார்ட் கிங்டம் ப்ரூனலின் பெயரிடப்பட்ட இந்த விருது அக்டோபர் 5 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்த 720 மெகாவாட் திட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோதியும், பூட்டானிய பிரதமரும் இணைந்து கூட்டாக கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று திறந்து வைத்தனர். இந்திய பிரதமர் இந்த திட்டத்தை "இந்தியா-பூட்டான் உறவுகளை கொண்டாடும் ஒரு முக்கியமான மைல்கல்" என்று குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்ல, "இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவது மக்களின் வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதை இந்த திட்டம் காட்டுகிறது" என்று பிரதமர் நரேந்திர மோதி சிலாகித்து பேசியிருந்தார்.
விருது பெற்ற இந்தியாவின் முயற்சிக்கு தனது பாராட்டுக்களை வெளிப்படுத்திய பூட்டானுக்கான இந்திய தூதர் ருச்சிரா கம்போஜ், “கடந்த ஆண்டு பூட்டானில் பிரதமர் மோடி மற்றும் டாக்டர் லோட்டே ஷெரிங் (Dr. Lotay Tshering) இணைந்து கூட்டாகத் தொடங்கிய மங்தேச்சு விருது மதிப்புமிக்க புருனல் பதக்கத்தை பெற்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த கட்டமைப்பு சிறப்பை சரியான முறையில் அங்கீகரிப்பதுடன், பகிரப்பட்ட இலக்கை நோக்கி இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான சிறந்த எடுத்துக்காட்டு இந்த பரிசு” என்று தெரிவித்தார்.
2012 இல் தொடங்கிய இந்த நீர்மின் திட்டத்தின் கட்டுமானம் சுமார் 5000 கோடி ரூபாய் செலவில் ஏழு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு 70 சதவீத தொகையை கடனாக கொடுத்த இந்தியா எஞ்சிய 30 சதவீதம் தொகையை பூட்டானுக்கு மானியமாக கொடுத்தது.
மங்க்தேச்சு திட்டம் தொடங்கப்பட்ட ஒரு வருடத்திற்குள் 1300 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது, இது திட்டமிடப்பட்ட இலக்குத் தொகையான 1200 கோடியை தாண்டிவிட்டது. திட்டத்தின் நான்கு அலகுகளும் முழு திறனுடன் இயங்குகின்றன. மேலும், 2020 ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் 779 மெகாவாட் என்ற அளவில் நாளொன்றுக்கு 18.7 மில்லியன் யூனிட்டுகள் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தத் திட்டம் பூட்டானின் ட்ரொங்சா (Trongsa) மாவட்டத்தில் அமைந்துள்ள நதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை, பூட்டானில் இந்தியா நான்கு நீர்மின் திட்டங்களை கட்டமைத்துக் கொடுத்துள்ளது. 1020 மெகாவாட் Tala Hydroelectric project, 336 MW Chukha HEP, 60 MW Kurichhu HEP மற்றும் 720 MW Mangdechhu HEP ஆகிய 4 திட்டங்களும் இந்தியாவின் கைவண்ணத்தில் உருவானவை ஆகும். 1200 மெகாவாட் புனாட்சங்சு- I (Punatsangchhu-I), 1020 மெகாவாட் புனாட்சங்சு- II (Punatsangchhu-II) மற்றும் 600 மெகாவாட் கோலோங்சு (Kholongchhu) ஆகியவை கட்டுமானத்தில் உள்ளன.
Read Also | இன்றைய செய்திகளில் முக்கிய இடத்தை பிடித்த உலக நடப்புகள் 22, October 2020
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR