பயங்கரவாதிகளை காப்பாற்றும் சீனா - பாகிஸ்தான்; ஐநாவில் இந்தியா காட்டம்
சர்வதேச தடைகளில் இருந்து பாகிஸ்தான் பயங்கரவாதி அப்துல் ரஹ்மான் மக்கியை காப்பாற்றிய சீனா மற்றும் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது.
சர்வதேச தடைகளில் இருந்து பாகிஸ்தான் பயங்கரவாதி அப்துல் ரஹ்மான் மக்கியை காப்பாற்றிய சீனா மற்றும் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) கூட்டத்தில், "உலகின் மிகவும் மோசமான பயங்கரவாதிகளை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மிகவும் வருந்தத்தக்கது" என்று இந்தியா கூறியது. இத்தகைய இரட்டைத் தரநிலைகள் பாதுகாப்புச் சபையின் பொருளாதாரத் தடைகள் மீதான நம்பகத்தன்மையை எப்போதும் இல்லாத அளவிற்குக் குறைத்துள்ளன என இந்தியா சாடியுள்ளது.
பயங்கரவாதிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானம்
இந்த ஆண்டு ஜூன் மாதம், இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பாகிஸ்தான் பயங்கரவாதி அப்துல் ரஹ்மான் மக்கிக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மானத்தை முன்வைத்தது. ஆனால் பாகிஸ்தானின் உத்தரவின் பேரில், சீனா இந்த முன்மொழிவை வீட்டோ அதிகாரத்தின் மூலம் ரத்து செய்தது, அதன் காரணமாக அப்துல் ரஹ்மான் மக்கியை தடை செய்யும் திட்டம் நிராகரிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் இந்தியா சீனா-பாகிஸ்தானிடம் கடுமையாக கூறியது.
பயங்கரவாதிகளைத் தடை செய்வதில் குழப்பம் கூடாது
பயங்கரவாதம் தொடர்பாக சீனாவின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா கம்போஜ் கூறுகையில், பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை தகுந்த விளக்கமில்லாமல் நிலுவையில் வைக்கும் அல்லது தடுக்கும் போக்கு முடிவுக்கு வர வேண்டும் என்றார். தடைகள் குழுவின் திறம்பட செயல்பாட்டிற்கு, வெளிப்படையான, பொறுப்புணர்வுடன் கூடிய, பாரபட்சமற்ற நடவடிக்கை அவசியம். பயங்கரவாதிகளை பட்டியலில் சேர்க்கும் கோரிக்கையை கேட்காமல், விளக்கம் அளிக்காமல் நிலுவையில் இருக்கும் அல்லது தடுக்கும் போக்கு முடிவுக்கு வர வேண்டும் என கடுமையாக கூறினார்.
நம்பகத்தன்மை குறைந்துவிட்டது
ருசிரா காம்போஜ் கூறுகையில், “உலகின் மிகவும் மோசமான பயங்கரவாதிகளை பட்டியலிடுவதற்கான திட்டம் நிலுவையில் இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது" என்றார். பயங்கரவாத எதிரப்பு நடவடிக்கை மீதான நம்பகத்தன்மை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாதுகாப்பு கவுன்சிலின் அனைத்து நாடுகளும் ஒரே குரலில் பேசும் என்று நம்புகிறோம்” என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ