அமெரிக்க விண்வெளி ஏஜென்சியின் (NASA)  செயல் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பவ்யா லால் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரான ஜோ பைடனின் நாசாவின் மாற்றத்திற்கான மறுஆய்வுக் குழுவில் உறுப்பினராக உள்ளார். மேலும் பைடன் நிர்வாகத்தின் கீழ் நிறுவனத்தின் மாற்றங்களை மேற்பார்வையிடுவார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கான நியமன உத்தரவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) நிர்வாகம் வெளியிட்டு உள்ளது


நாசா அறிக்கை வெளியிட்டது


பவ்யாலால் பொறியியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் பரந்த அனுபவம் பெற்றவர் என்று அமெரிக்க விண்வெளி நிறுவனம் NASA தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பவ்யா லால் விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் கொள்கை பிரிவின் தீவிர உறுப்பினராகவும் உள்ளார்.


யார் பவ்யா லால்
பவ்யா லால் பாதுகாப்பு பகுப்பாய்வு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை நிறுவனத்துடன் (STPI) 2005 முதல் 2020 வரை ஆராய்ச்சி பணியாளராக பணியாற்றியுள்ளார்.


இதற்கு முன்பு, அவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனமானC-STPS LLC-யின் தலைவராக இருந்தார். முன்னதாக, ஏபிடி அசோசியேட்ஸ் நிறுவனத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை ஆய்வுகளுக்கான உலகளாவிய கொள்கை ஆராய்ச்சி ஆலோசனை மையத்தின் இயக்குநராக இருந்தார்.


மேலும், அணுசக்தி பொறியியல் பிரிவில் இளநிலை மற்றும் முதுகலை பட்டத்தையும், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை பிரிவில் முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார்.


ALSO READ | தேவையற்ற பயணத்தைத் தவிர்க்கவும் என மியான்மரில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தல்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR