பாகிஸ்தான் வலைத்தளதில் இந்திய சுதந்திரதின வாழ்த்து
பாக்கிஸ்தானின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் இன்று பரபரப்பான சுழலில் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டது.
PTI அறிக்கையின்படி, பாகிஸ்தான் வலைத்தளத்தில் இந்திய தேசிய கீதம் மற்றும் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் குறித்த வாழ்த்து செய்தி பதிவிடபட்டுள்ளது என தெரிவித்தது.
முன்னதாக பாக்கிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்: www.pakistan.gov.pk சிறிது நேரம் முடக்கப்பட்டது. எனினும், அது பின்னர் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது.
ட்விட்டர் பயனாளர்களின் கூற்றுப்படி, வலைத்தளமானது ஹேக்கரின் இந்திய சுதந்திர தின வாழ்த்து செய்தியுடன் தொடங்கப்பட்டது. பின்னர் சுமார் 2.45 மணியளவில் வலைத்தளம் முடக்கப்பட்டதகவும் கூறினர்.
முன்னதாக இரண்டு மாதங்களுக்கு முன்னர், 30 பாகிஸ்தான் வலைத்தளங்கள் முடக்கப்பட்டது குறிபிடத்தக்கது.