அடப்பாவமே... ஜிம்மில் நடந்த துயரம் - துடித்து உயிரிழந்த இன்ஸ்டா பிரபலம்!
இந்தோனேஷியாவை சேர்ந்த இணைய பிரபலம் ஒருவர், ஜிம்மில் 210 கிலோ பாரத்தை தூக்கி பயிற்சி மேற்கொண்டபோது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உயிரிழந்தார்.
உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலமும், அதுதொடர்பாக இயங்கியதன் மூலமும் சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்பட்டவர் இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்த ஜஸ்டின் விக்கி. 33 வயதான இவர், உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தபோது, 210 கிலோ பாரத்தை தூக்க முயற்சித்தபோது, அதன் பார்பெல் கழுத்தில் விழுந்ததால், அவர் உயிரிழந்தார் என கூறப்படுகிறது. கடந்த ஜூலை 15ஆம் தேதி அன்று இந்தோனேசியாவின் பாலியில் உள்ள ஜிம்மில் அவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, இச்சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
சமூக ஊடகங்களில் ஒரு வைரலான வீடியோவில், ஜஸ்டின் விக்கி பாரடைஸ் பாலி ஜிம்மில் தனது தோள்களில் பார்பெல்லை வைத்துக்கொண்டு உடற்பயிற்சி செய்ய முயற்சிப்பதைக் காண முடிகிறது. அதாவது, அந்த பாரத்தை வைத்து அவர் உட்கார்ந்தும், எழுந்தும் உடற்பயிற்சி மேற்கொண்டார். அப்படி எடையை தூக்கி அமரும்போது அவரால் எழ முடியாமல் அவர் உட்கார்ந்துவிட்டதால், அவரின் கழுத்தில் காயமேற்பட்டது.
மேலும் படிக்க | ஆன்லைன் சூதாட்ட மோசடியில் 58 கோடி ரூபாய் தோற்ற தொழிலதிபர்! மோசடி அம்பலம்
அவர் எடையைப் பிடிக்க முயன்றபோது, கழுத்தின் பின்புறத்தில் பாரம் விழுந்ததால் அவர் உட்கார்ந்த நிலையில் விழுந்தார். ஜஸ்டின் விக்கியின் ஸ்பாட்டர் தனது சமநிலையை இழப்பது போல் தெரிகிறது. சம்பவத்தின் போது அவரும் பின்னோக்கி விழுவதைக் காணலாம். ஸ்பாட்டர் என்பவர் பளு தூக்குதலின் போது உதவி மற்றும் ஆதரவை வழங்குபவர்.
இந்தோனேஷியாவின் ஜஸ்டின் விக்கி 210 கிலோகிராம் எடையை உயர்த்த முயன்றதாக கூறப்படுகிறது. விபத்தின் காரணமாக, அவர் "கழுத்து உடைந்து, அவரது இதயம் மற்றும் நுரையீரலை இணைக்கும் முக்கிய நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்" என்று செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஜஸ்டின் விக்கி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், அவசர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இறந்ததில் இருந்து, ஜஸ்டின் விக்கிக்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பாரடைஸ் பாலி, அவர் பணியாற்றிய உடற்பயிற்சி கூடம், இன்ஸ்டாகிராம் பதிவில், விக்கியை உத்வேகம், உந்துதல் மற்றும் அசைக்க முடியாத ஆதரவின் கலங்கரை விளக்கமாக குறிப்பிட்டுள்ளது.
பாரடைஸ் பாலி இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவில்,"ஜஸ்டின் ஒரு உடற்பயிற்சி நிபுணர் மட்டுமல்ல; அவர் உத்வேகம், ஊக்கம் மற்றும் அசைக்க முடியாத ஆதரவின் கலங்கரை விளக்கமாக இருந்தார்" என தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | கணவரையும், மாமனாரையும் திருமணம் செய்துகொண்ட பெண்... அது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ