Bizarre Viral News: திருமணம் என்றாலே பல நேரங்களில் அதிக பிரச்னைகள் சந்திக்கும் நிகழ்வுகளில் ஒன்றாகும். சொந்தபந்தங்கள் சண்டையில் இருந்து திருமண ஆடை, ஏற்பாடுகளில் வரும் கோளாறு வரை திருமணத்தில் ஏற்படும் தவறுகளும், பிரச்னைகளும் உண்மையில் தவிர்க்க முடியாதவை என்றுதான் கூறவேண்டும்.
இருப்பினும், நீங்கள் உங்கள் மாமனாருடன் தவறுதலாக திருமணம் செய்து கொண்டீர்கள் என்பது அறிந்துகொள்வது என்பது வாடிக்கையானது அல்ல. ஆம், நீங்கள் படித்தது சரிதான்! ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பெண், தனது திருமணத்தின் போது ஒரு பெரிய சிக்கல் ஒன்றை எதிர்கொண்டதாக ஒரு வினோத சம்பவத்தை விவரித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் ஒளிப்பரப்பாகும் 'ஃபிட்ஸி மற்றும் விப்பா வித் கேட் ரிச்சி' என்ற வானொலி நிகழ்ச்சியில் சமீபத்திய எபிசோடில், நெறியாளரிடம் பேசிய ஒருவர் பெண் ஒரு வினோத கதையை தெரிவித்தார். திருமணத்தின் சாட்சியாக இருந்த அவர் கணவரின் தந்தை, அந்த பெண்ணுக்கே இரண்டாவது கணவராக மாறியதாக கூறினார். கேட்பதற்கு மிகவும் அபத்தமான கதையாக தெரிந்தாலும், அவர் தனது திருமண நாளில் தவறுதலாக தனது மாமனாரை எப்படி திருமணம் செய்து கொண்டார் என்பதைப் பகிர்ந்து கொண்டார். zeenews.india.com/tamil/world/bizarre-wedding-daughter-married-her-father-as-fourth-wife-viral-video-google-trends-453194
கிம் என்ற அந்த பெண்மணி, தனது பயங்கரமான திருமண பிளாஷ்பிளாக்கை விளக்கினார். அதுகுறித்து அவர்,"நான் திருமணம் செய்து கொண்டேன், எங்களுக்கு இரண்டு சாட்சிகள் தேவை என்று சொன்னார்கள். அதன்படி, ஒன்று என் அம்மா மற்றொன்று என் கணவரின் தந்தை. இதுவரை, எல்லாம் அமைக்கப்பட்டு திருமணம் நடைபெற தயாராக இருந்தது; அதுவரை எந்த தவறும் நடக்கவில்லை" என்றார்.
மேலும், எல்லாவற்றையும் கையொப்பமிட்டு இறுதி செய்த பிறகுதான் பிழையை அந்த குடும்பம் பார்த்துள்ளது."நாங்கள் சான்றிதழை கண்டு அதிர்ச்சியடைந்தோம். நாங்கள் அதைப் பார்த்தபோது, நான் இப்போது என் கணவர் மற்றும் என் மாமனாரை திருமணம் செய்துகொண்டேன் என்பதை உணர்ந்தேன்" என்றார், கிம்.
திருமணச் சான்றிதழைப் பார்த்தபோது, மணமகன் கையெழுத்திட்ட அதே இடத்தில், அவரின் மாமனாரும் கையொப்பமிட்டுள்ளார். இதனால், சான்றிதழின்படி அவரது மாமனார் கிம்மின் இன்னொரு கணவரானார். நிகழ்ச்சி அழைப்பாளரின் வினோதமான கதையைக் கேட்ட நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் திணறினர். "அப்படியானால் சட்டப்பூர்வமாக ஒரு காகிதத்தில் நீங்கள் உங்கள் மாமனாரை திருமணம் செய்துகொண்டீர்களா?" என கேள்வியெழுப்ப, அதற்கு கிம், "நல்லவேளை அது சான்றிதழ் அளவில் மட்டும் தான். கடவுளுக்கு நன்றி! அவர் சட்டப் பத்திரங்களில் கையெழுத்திடவில்லை, அப்படியாகியிருந்தால் அது பயங்கரமானதாக மாறியிருக்கும்" என பதிலளித்தார்.
இந்த தவறு அதிகாரப்பூர்வமாக கிம்மின் திருமணக் கதையின் துரதிர்ஷ்டவசமான சிறப்பம்சமாக இருந்தாலும், அவர் தனது மாமியாரை "சட்டப்படி" திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை தெளிவுபடுத்தினார்.
மேலும் படிக்க | நாய் - பூனைகளை இறைச்சிக்காக கொலை செய்ய தடை விதித்துள்ள இந்தோனேஷியா..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ