சிந்து நதி நீர் ஒப்பந்ததில் எந்த மாற்றமோ, திருத்தமோ அனுமதிக்க மாட்டோம் என பாகிஸ்தான் கூறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தமானது 58 ஆண்டுகள் பழமையானது. அண்மையில் பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர்  ஒப்பந்த்தில் உள்ள வேறுபாடுகள் மறு ஆய்வு செய்யப்பட்டு தீர்வு காணப்படும் என்று இந்தியா தெரிவித்தது. 


இந்த நிலையில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து பாகிஸ்தான் தரப்பில் கூறியதாவது:- சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ள பாகிஸ்தான் அனுமதிக்காது. எங்களின் நிலைப்பாடானது ஒப்பந்தத்தின் புனிதத்தை காப்பதுதான் என்று கூறியுள்ளது.


சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் விவரம்:-


கடந்த 1960-ம் ஆண்டு இந்தியாவின் பிரதமரான நேரு மற்றும் பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் அயூப் கான் தலைமையில் சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி இந்தியாவில் இருந்து பாயும் ஜீலம், செனாப், சட்லெஜ், சிந்து, பீஸ் மற்றும் ராவி ஆகிய ஆறு நதிகள் இணைக்கப்பட்டு அதில் இருந்து 80 சதவீத நீர் பாகிஸ்தானுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. எஞ்சிய 20 சதவீத நீரை மட்டுமே இந்தியா பயன்படுத்திக் கொள்கிறது. 


இந்திய குறைந்த அளவு நீரையே பயன்படுத்திகிறது என்பது குறிப்பிடத்தக்கது.