ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய  ஜெனிவாவிற்கான இந்தியாவின் பிரதிநிதி இந்திரா மணி பாண்டே இலங்கை மீதான ஐநா மனித உரிமைகள் பேரவை விவாதத்தில் பேசினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

“தமிழர்களின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்றுவது இலங்கையின் சிறந்த நலன்களுக்கானது என்பதை இந்தியா பரிந்துரைக்கிறது” என்று அவர் தெரிவித்தார். 


தொடர்ந்து பேசிய அவர், “இலங்கை தொடர்பான ஐநா மனித உரிமைகள் ஆணையர் அறிக்கை மற்றும் அவரது உரையின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது.



 
இலங்கையுடன் நெருங்கிய நட்பு நாடென்ற வகையிலும் பக்கத்து நாடு என்ற நோக்குடனும் இந்தியா தொடர்ந்தும் உறுதிப்பாடுடன் இலங்கை விடயத்தில் முன்னின்று செயற்படுகின்றது.


Also Read | நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம்: பிரிட்டன் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு


எவ்வாறாயினும் இலங்கை தொடர்பான இந்தியாவின் தொடர்ச்சியான நிலைப்பாடானது முக்கிய இரு தூண்களில் உள்ளது.
 
1. இலங்கையின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான ஆதரவு,
 
2. சமத்துவம், நீதி, அமைதி, கௌரவத்திற்கான இலங்கைத் தமிழர்களின் விருப்பங்களுக்கு உறுதியளித்தல்
 
ஆகிய இரு பிராதன தூண்களை மையப்படுத்தியதாகவே எமது நிலைப்பாடு உள்ளது. இவை தவிர வேறு தேர்வுகள் இல்லை.
 
அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு உட்பட தமிழ் சமூகத்தின் உரிமைகளை மதிப்பது, இலங்கை ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் நேரடியாக பங்களிப்பு செய்யும் என்பதை உறுதியாக நம்புகிறோம்.


Also Read | ஆஸ்திரேலியாவில் இனி செய்தி நிறுவனங்களுக்கு Google, Facebook பணம் செலுத்த வேண்டும்
 
எனவே, தமிழ் சமூகத்தின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்றுவது இலங்கையின் சிறந்த நலன்களுக்கானது என்பதையே இந்தியா பரிந்துரைக்கிறது.
 
நல்லிணக்க செயல்முறை மற்றும் இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது உள்ளிட்ட இத்தகைய விருப்பங்களுக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கையை கேட்டுக்கொள்கிறோம்” என்று  இலங்கை மீதான ஐநா மனித உரிமைகள் பேரவை விவாதத்தில் இந்தியாவின் தரப்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.


ALSO READ | உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டது


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR