ஈரானின், அணுகுண்டு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே நவம்பர் 27ஆம் தேதி கொல்லப்பட்டார். தெஹ்ரானில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் அப்சார்ட்  என்ற பகுதியில் காரில் சென்று கொண்டிருக்கும்போது, ஈரான் விஞ்ஞானி துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார். இந்தப் படுகொலை ஈரானைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், அந்நாட்டின் அணுகுண்டு ஆய்வுத்துறையின் தந்தை என அழைக்கப்படும் இவரது படுகொலையின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஈரான் (Iran) குற்றம் சாட்டியுள்ளது.


செயற்கைக்கோளால் கட்டுப்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) கொண்ட ஆயுதங்களால் அணுகுண்டு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே கொல்லப்பட்டதாக ஈரான் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.


இது குறித்து பேசிய ஈரான் புரட்சிப் படையின் துணைத் தளபதி அலி பதாவி, “ தலைநகரின் கிழக்கே ஒரு நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தபோது மொஹ்சென் ஃபக்ரிசாதே கொல்லப்பட்டார். செயற்கைக்கோள்களால் கட்டுப்படுத்தப்படும் ஆயுதத்தைப் பயன்படுத்திக் எங்கள் விஞ்ஞானியை கொன்றுள்ளனர் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.


இத்தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் (Israel)  இருப்பதால் தான், மேற்கத்திய நாடுகள் இந்தப் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்க மறுத்துவிட்டன என்றும் ஈரான் கூறியுள்ளது.


இஸ்ரேல் இதற்கு கடுமையான விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் ஈரான் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால், இதுகுறித்த எந்த ஆதாரத்தையும் ஈரான் வெளியிடவில்லை.


ஈரானில் ஆணு ஆயுதப் புரட்சியில் முக்கியப் பங்காற்றியவர் மொஹ்சென் ஃபக்ரிசாதே. அதனால் தான் ஈரானின் அணுகுண்டு ஆய்வுத் துறையின் தந்தை என்று அழைக்கப்பட்டு வந்தார்.


ஈரான் விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே படுகொலை தொடர்பாக இஸ்ரேல் இதுவரை எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ  | அழுத பிள்ளை பால் குடிக்கும்.. ஆனால் இங்கே அழவில்லை என்றால் உயிர் போகும்..!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR