கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஈரான் தன்னுடைய அணு ஆயுத ஒப்பந்தக் கொள்கைகளில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றியது. இதனால் கோபமடைந்த அமெரிக்கா, ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது மட்டுமில்லாமல், தனது நேச நாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் எனக் கூறி ‏வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா அதிக அளவில் ஈரான் நாட்டில் இருந்து தான் கச்சாப் பொருட்களை வாங்குகிறது. இதனால் ஈரானுடனான வர்த்தகத்தை குறைத்துக் கொள்ளுமாறு இந்தியாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த பரபரப்பான் சூழ்நிலையில், நேற்று ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஈரான் நாட்டில் இருக்கும் தூதரக அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். அப்பொழுது பேசிய ஈரான் அதிபர் கூறியதாவது, அரசியலை உண்மையில் புரிந்து கொள்ளும் யாரும் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை தடுக்க மாட்டார்கள். எங்களுக்கு பல நெருக்கடிகள் உண்டு. 


மிஸ்டர் ட்ரம்ப், நாங்கள் உண்மையானவர்கள் எங்கள் பிராந்தியத்தின் நீர்வழிகளை பாதுகாக்க யார் உத்தரவிட வேண்டும்? வரலாற்றுக்கு தெரியும். தேவையில்லாமல் "சிங்கத்தின் வாலை பிடித்து விளையாட வேண்டாம். அது உங்களை வருத்தப்பட வைக்கும் எனக் கூறினார்.