மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவருமான பில் கேட்ஸ் (Bill Gates), சுமார் 27 வருடத்திற்குப் பின் தனது காதல் மனைவியை விவாகரத்துச் செய்ய முடிவு செய்துள்ளதாக, சில நாட்களுக்கு முன் வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பில் கேட்ஸுடன் (Bill Gates) விவாகரத்து செய்வதாக அறிவிப்பதற்கு குறைந்தது ஒரு வருடத்திற்கு முன்பே மெலிண்டா விவாகரத்திற்கு தயாரான மனநிலையில் இருந்ததாகவும், அது தொடர்பாக வழக்கறிஞர்களை சந்திக்கத் தொடங்கினார் என்று தகவல்கள் தெரிவித்தன. 


இப்போது அதற்கான காரணங்கள் மெது மெதுவாக வெளி வரத் தொடங்குகின்றன. 


பாலியல் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் விசாரணையில் இருந்த ஜஃப்ரி எப்ஸ்டீனுடன் (Jeffrey Epstein), பில் கேட்ஸிற்கு இருந்த தொடர்பு குறித்து மெலிண்ட அகவலை கொண்டதாக கூறப்படுகிறது.  எப்ஸ்டீன் இந்த வழக்கு தொடர்பான உயர் மட்ட விசாரணை தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறையில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


பில் கேட்ஸ் பல முறை எப்ஸ்டீனை (Jeffrey Epstein) சந்தித்ததாகவும், எப்ஸ்டீன் தங்கியிருந்த நியூயார்க் டவுன்ஹவுஸில் அவருடன் பில் கேட்ஸ் தங்கியிருந்ததாகவும் 2019 ஆம் ஆண்டில் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. கேட்ஸுக்கும் எப்ஸ்டீனுக்கும் இடையிலான சந்திப்புகள் பல முறை நடந்ததாக அந்த அறிக்கை கூறியது.


ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவர் யார்


எப்ஸ்டீன் ஒரு நிதியாளராக இருந்தார், அவர் பல செல்வந்தர்கள் மற்றும் செல்வாக்கு நிறைந்த நபர்களுடன் உறவு கொண்டிருந்தார். அவர் 1982 ஆம் ஆண்டில் தனது சொந்த நிறுவனமான ஜே எப்ஸ்டீன் அண்ட் கோவை நிறுவி, 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான சொத்துக்களைக் கொண்ட செல்வந்தர்களுக்கு தனது சேவைகளை வழங்கி, பணம் ஈட்டி வந்தார். எப்ஸ்டீன் எழுதிய உயிலின் படி, அவருக்கு 57,76,72,654 அமெரிக்க டாலர் சொத்து மதிப்பு இருந்தது.


ஜூலை 8, 2019 அன்று, எப்ஸ்டீனுக்கு ஒரு சிறுமியை பாலியல் கடத்தல் செய்தது மற்றும் பாலியல் கடத்தலுக்கு சதித்திட்டடிய குற்றசாட்டின் பேரில் கைது செய்யபப்ட்டார். அவர் குற்றவாளி அல்ல என்று நீதிமன்றத்தில் வாதாடினார். ஆகஸ்ட் 10 அன்று, எப்ஸ்டீன் தற்கொலை செய்து கொண்டார்.


ALSO READ | உலகின் மிக அழுக்கான மனிதன்; 65 ஆண்டுகளாக குளிக்காத ‘மணம்’ வீசும் மனிதர்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR