வாஷிங்டன்: மைக்ரோசாப்டின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ், தங்களது 27 ஆண்டுகால உறவு முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளனர்.
ஒரு அறிக்கையை வெளியிட்ட பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் தங்கள் திருமணத்தை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இனி நாங்கள் ஒன்றாக முன்னேற முடியாது என்ற நிலைக்கு தற்போது வந்துவிட்டோம் என்று நாங்கள் உணர்கிறோம் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
ட்வீட் மூலம் தகவல்
இது தொடர்பாக பில் கேட்ஸ் (Bill Gates) ட்வீட் செய்துள்ளார். அதில் அவர், "நாங்கள் எங்கள் உறவு குறித்து ஆழமாக யோசித்தோம். முடிவில் நாங்கள் இந்த உறவை முடித்துக்கொள்வதாக முடிவெடுத்துள்ளோம். இனி எங்களால் ஒன்றாக முன்னேற முடியாது. இருவரும் எங்களுக்கான தனிமையை விரும்புகிறோம். மேலும் வாழ்க்கையின் ஒரு புதிய கட்டத்தை நோக்கி செல்ல விரும்புகிறோம்" என்று எழுதியுள்ளார்.
விவாகரத்துக்குப் பிறகு, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸின் நிதி விவகாரங்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து அதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை. இருவரும் நன்கொடை மற்றும் சமூக சேவை பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனமான 'பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை'-யின் அறங்காவலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது 2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
ALSO READ: Indian digital innovations: பில்கேட்ஸின் பாராட்டு மழை
இருவரும் சந்தித்தது எப்படி?
பில் மற்றும் மெலிண்டா 1987 இல் மைக்ரோசாப்டில் (Microsoft) சந்தித்தனர். மெலிண்டா நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளராக சேர்ந்தார். ஒரு வணிக விருந்தின் போது இருவருக்கும் இடையே துவங்கிய ஒரு உரையாடல் காதலாக மலர்ந்து திருமணம் வரை சென்றது.
தடுப்பூசி குறித்து சர்ச்சைக்குரிய அறிக்கை அளித்திருந்தார் பில் கேட்ஸ்
தங்களது உறவை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அறிவிப்புக்கு சற்று முன்பு, பில் கேட்ஸ் தடுப்பூசி (Corona Vaccine) மற்றும் வளரும் நாடுகள் குறித்து ஒரு சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்டார். ஸ்கை நியூஸுக்கு அளித்த பேட்டியில், கோவிட் தடுப்பூசி சூத்திரத்தைப் பகிர்ந்து கொள்வதை ஏதுவாக்கும் வகையில், அறிவுசார் சொத்துச் சட்டத்தை மாற்ற முடியுமா என்று பில் கேட்ஸிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த பில் கேட்ஸ், "வளரும் நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி சூத்திரம் கொடுக்கப்படக் கூடாது. இதனால், வளரும் மற்றும் ஏழை நாடுகள் தடுப்பூசிக்காக சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருக்கலாம். ஆனால், அதற்காக அந்த நாடுகளுக்கு தடுப்பூசி சூத்திரத்தை அளிக்க முடியாது." என்று கூறியிருந்தார்.
ALSO READ: தடுப்பூசி பார்முலாவை வளரும் நாடுகளுக்கு கொடுக்க கூடாது: பில் கேட்ஸின் சர்ச்சை கருத்து
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR