ஐ.எஸ்., பயங்கரவாத தலைவன் பாக்தாதி ரஷ்ய விமானத் தாக்குதலில் பலி :அறிக்கை

ஐ.எஸ்., பயங்கரவாத தலைவர் பாக்தாதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவனாக இருந்த அபு பக்கர் அல் பாக்தாதி. இவர் ஐ.எஸ் தீவிரவாதிகளை வழி நடத்துகிறான். ரஷ்ய நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, கடந்த மே 28 அன்று ரஷ்யா நடத்திய விமானப்படை தாக்குதலில் அபு பக்கர் அல் பாக்தாதி மற்றும் அவனுடன் இருந்த முக்கிய பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. ஆனால் இதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
கடந்த சில வருடங்களுக்கு முன் அபு பக்கர் அல் பாக்தாதி, அமெரிக்க தாக்குதலில் பலியானதாகவும் செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.