அமெரிக்கா தாக்குதலில் 250 ஐஎஸ் பயங்கரவாதிகள் பலி
பலூஜாவில் விமானம் மூலம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 250 பயங்கரவாதிகள் பலியானார்கள். 24 மணி நேரத்திற்குள் 250 ஐஎஸ் பயங்கரவாதிகளை குண்டு வீசி கொன்றுவிட்டதாக அமெரிக்கா இராணுவம் தெரிவித்துள்ளது. `
ஈராக் நகரமான பலூஜா, ஐஎஸ் பயங்கரவாதிகள் வசம் உள்ளது. இதை மீட்டுவிட்டதாக அமெரிக்கா தலைமையிலான ஈராக் -ஆதரவு படைகள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் பலூஜாவில் இருந்து வெளியே சென்று கொண்டிருந்த ஐஎஸ் வாகன அணிவகுப்பின் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கியதாகவும், அதில் 250-க்கும் மேற்பட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்கா மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.