ISISI Leader Killed: இஸ்லாமிய அரசு பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு அல்-ஹசன் அல்-ஹஷிமி அல்-குரேஷி கொல்லப்பட்டார். இது தொடர்பாக செய்தி தெரிவித்த இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) தீவிரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர், 
ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு ஹசன் அல் ஹஷிமி அல் குரேஷி கொல்லப்பட்டதாக தெரிவித்தார், ஆனால், புதிய தலைவர் தொடர்பான எந்த விவரங்களையும் அவர் தெரிவிக்கவில்லை. டெலிகிராம் சேனலில் வெளியிடப்பட்ட ஆடியோ செய்தியில் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அபு அல்-ஹசன் அல்-ஹஷ்மி அல்-குரைஷி எதிரிகளுடன் போரிட்டு கொல்லப்பட் செய்தியை ஆடியோ மூலம் தெரிவித்த  செய்தித் தொடர்பாளர், புதிய ஐஎஸ் தலைவர் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.


மேலும் படிக்க | FIFA Qatar: கால்பந்துப் போட்டியில் கத்தாரின் கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகளை துறந்த மாடல்!


ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் புதிய தலைவர் நியமனம்


கடந்த மார்ச் மாதத்தில் இஸ்லாமிய அரசு பயங்கரவாத அமைப்பு ஐஎஸ்ஐஎஸ், தங்கள் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹஷ்மி அல்-குரேஷியின் மரணச் செய்தியை வெளியிட்டது. பிறகு, அபு அல்-ஹசன் அல்-ஹஷ்மி அல்-குராஷி புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டார். குரேஷி கொல்லப்பட்ட முன்னாள் IS கலீஃபா அபு பக்கர் அல்-பாக்தாதியின் சகோதரர் என்று ஈராக் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஒரு மேற்கத்திய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.  


குரேஷியும் பாக்தாதியும் கொல்லப்பட்டனர்


வடக்கு சிரியாவில் அமெரிக்க தாக்குதல்களின் போது, தங்கள் பதுங்கிடங்களில், தங்கியிருந்த குரேஷி மற்றும் பாக்தாதி இருவரும், தங்களுடைய தங்குமிடங்களை வெடிக்கச் செய்து, குடும்பங்களுடன் உயிர் துறந்தனர். கடந்த தசாப்தத்தில் அண்டை நாடான சிரியாவில் நடந்த உள்நாட்டுப் போரின் குழப்பத்திலிருந்து வெளிவந்த இஸ்லாமிய அரசு, 2014 இல் ஈராக் மற்றும் சிரியாவின் பெருமளவிலான பகுதிகளைக் கைப்பற்றியது.


மேலும் படிக்க | FIFA திட்டப் பணிகளில் 500 புலம் பெயர்ந்த தொழிலாளிகள் இறந்தனர்: ஒப்புக்கொண்ட கத்தார்


பயங்கரவாதம் இன்னும் தொடர்கிறது


இஸ்லாமிய அரசு தனது கொடூரமான ஆட்சியில் இஸ்லாத்தின் குறுகிய விளக்கத்தின் பெயரில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றது. ஈராக் மற்றும் சர்வதேச படைகள் 2017 இல் மொசூலில் ஐஎஸ்ஐஎஸ் குழுவை தோற்கடித்தன. அதன் மீதமுள்ள ஆயிரக்கணக்கான போராளிகள் சமீப ஆண்டுகளில் பெரும்பாலும் தொலைதூரப் பகுதிகளில் மறைந்துள்ளனர், ஆனால் இன்னும் குறிப்பிடத்தக்க கிளர்ச்சி பாணி தாக்குதல்களை நடத்தும் திறன் கொண்டவர்களாக ஐஎஸ்ஐஎஸ் குழுவினர் இருப்பது ஆபத்தானதாக இருக்கிறது.


மேலும் படிக்க | e₹-R: இந்தியாவின் அதிகாரப்பூர்வ கிரிப்டோகரன்சி டிஜிட்டல் ரூபாய் புழக்கத்தில்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ