இஸ்லாமாபாத்: இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற (Islamabad High Court) தலைமை நீதிபதி அதர் மினால்லா (Athar Minallah), திங்களன்று ஒரு வழக்கை விசாரித்தபோது, ​​அனைவரின் அரசியலமைப்பு உரிமைகளும் இங்கு பாதுகாக்கப்படும் என்று கூறினார். ஏனெனில் இது இந்தியா அல்ல, பாகிஸ்தான் எனக்கூறி, நமது நாட்டை குறித்து கேவலமான முறையில் கேலி செய்யும் விதமாகவும், அதேநேரத்தில் நம் மீது விஷத்தை கக்கும் செயலையும் அந்த நீதிபதி செய்துள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தகது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மாதம் இஸ்லாமாபாத் காவல்துறையினரால் பஷ்டூன் தெஹ்புஸ் இயக்கம் (பி.டி.எம் - Pashtun Tahaffuz Movement) தலைவர் மன்சூர் பஷ்டான் மற்றும் அவாமி தொழிலாளர் கட்சி (ஏ.டபிள்யூ.பி - Awami WorkersParty) ஆகிய 23 பேரை கைது செய்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான தீர்ப்பளிக்கும் போது தலைமை நீதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.


தலைமை நீதிபதி கூறுகையில், போரட்டக்காரார்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது, "ஒரு ஜனநாயக அரசாங்கம் கருத்துச் சுதந்திரத்தைத் தடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை" என்றார். "தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசாங்கத்தால் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்த முடியாது, கருத்து விமர்சனத்திற்கு அஞ்சக்கூடாது" என்று அவர் கூறினார்.


மேலும் பேசிய நீதிபதி மினால்லா, "அனைத்து அரசியலமைப்பு உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். இது பாகிஸ்தான், இந்தியா அல்ல" என்றார். "நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்க விரும்பினால், அனுமதி பெறுங்கள். உங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றால், இங்கே நீதிமன்றம் உள்ளது" என்றார்.


23 எதிர்ப்பாளர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது இஸ்லாமாபாத் துணை ஆணையர் ஹம்ஸா ஷப்காத் நீதிமன்றத்தில், எதிர்ப்பாளர்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட்டதாக தெரிவித்தார். துணை ஆணையரின் அறிக்கையின் அடிப்படையில், போராட்டக்காரர்களின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் முடித்து வைத்தது. தலைமை நீதிபதி மினல்லா, "இஸ்லாமாபாத் நிர்வாகத்தின் அறிக்கையின் பின்னர் அனைத்து மனுக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன" என்றார்.


நீதிமன்றத்தில் பிப்ரவரி 2 ம் தேதி நடைபெற்ற விசாரணையில் பிரிவு 124-ஏ (தேசத்துரோகம் தொடர்பானது) அகற்றப்பட்டதாகக் கூறப்பட்டது, ஆனால் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (ஏடிஏ), 1997 இன் பிரிவு 7 எதிர்ப்பாளர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டு உள்ளது. போராட்டகார்கள் மீது ஏன் தேசத்துரோக குற்றச்சாட்டுகள் போடப்பட்டது என விளக்கம் அளிக்குமாறு ஒரு மாஜிஸ்திரேட்டிடம் நீதிமன்றம் கோரியது. அதன் பின்னர் நடந்த விசாரணையின் போது தான் நீதிபதி மினால்லா இந்தியாவை மேற்கோள்காட்டி தீர்ப்பில் பேசியுள்ளார்.


CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிட்டதற்காக இந்தியாவில் சில நபர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் (NSA) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நேரத்தில் அவரது கருத்துக்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.