Israel vs Palestine: பாலஸ்தீனிய வீடுகளை இடித்த இஸ்ரேல் அரசு
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் அமைந்துள்ள வடக்கு ஜோர்டான் பள்ளத்தாக்கில் உள்ள பாலஸ்தீனியர்களின் வீடுகளை இடிக்க இஸ்ரேல் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
மேற்குக் கரை கிராமத்தில் உள்ள பாலஸ்தீனிய வீடுகளை இடிக்க இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் அமைந்துள்ள வடக்கு ஜோர்டான் பள்ளத்தாக்கில் உள்ள பாலஸ்தீனியர்களின் வீடுகளை இடிக்க இஸ்ரேல் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
புதன்கிழமை (07-07-2021) அன்று இஸ்ரேல் அதிகாரிகள் இட்ட உத்தரவினால் இப்பகுதியில் இருந்து 63 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் கணிசமானவர்கள் இணைக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் வாழ்கின்றனர், எனவே இவர்கள் யூத அரசின் குடிமக்களாக இல்லாமல் இஸ்ரேலை வசிப்பிடமாக கொண்டுள்ளனர்.
கடந்த காலத்திலும் இதே போல் வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த இடத்திற்குத் திரும்பிய மக்கள், யூதர்களின் குடியேற்ற விரிவாக்கத்தை (Jewish settlement expansion) மேற்கொள்வார்கள் என்பதால், அவர்களை இஸ்ரேல் பலவந்தமாக வெளியேற்ற முயற்சிப்பதாக பாலஸ்தீனியர்களும் உரிமைக் குழுக்களும் குற்றம் சாட்டுகின்றன.
Also Read | வரலாறு காணாத கடும் வறட்சியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான்
கிர்பெட் ஹம்சா கிராமத்தில் கூடாரங்களையும் பிற கட்டுமானங்களையும் இஸ்ரேலிய அதிகாரிகள் ஏழாவது முறையாக அழித்திருப்பதாக மேற்குக் கரையில் (West Bank) மட்டுப்படுத்தப்பட்ட சுயராஜ்யத்தை நிர்வகிக்கும் பாலஸ்தீனிய ஆணையத்தின் அதிகாரி முவாதாஸ் பஷாரத், கூறுகிறார்.
"இப்போது 63 பாலஸ்தீனியர்களுக்கு தங்குவதற்கு வீடுகள் இல்லை. பதினொரு குடும்பங்களின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன" என்று அவர் கூறினார். இது பாலஸ்தீனியர்களுக்கு எதிரான "அரசின் பயங்கரவாதம்" என்று குற்றம் சாட்டினார்.
2012 ல் "துப்பாக்கிச் சூடு வரம்புக்கு உட்பட்ட இடங்களை ஆக்கிரமித்த" பாலஸ்தீனியர்களால் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கூடாரங்களை இடிக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இஸ்ரேல் செயல்பட்டதாக, பாலஸ்தீனியர்களுடனான இஸ்ரேலிய இராணுவ தொடர்பு நிறுவனமான கோகாட் (COGAT) கூறுகிறது.
Also Read | 'Hitler did good things' சர்ச்சைகளின் நாயகன் டொனால்ட் டிரம்பின் ஹிட்லர் புகழ்
1967 ஆம் ஆண்டு போரில் கைப்பற்றப்பட்ட ஒரு பகுதியான மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனிய கட்டமைப்புகளை அழிப்பதில் இஸ்ரேல் மும்முரமாக உள்ளது.
ஜோர்டான் பள்ளத்தாக்கிலுள்ள கிர்பெட் ஹம்சா (in Khirbet Humsa) கிராமத்தில் உள்ள பெடோயின் (Bedouin), துப்பாக்கிச் சூடு மண்டலத்திலிருந்து அவர்களை மாற்று இடத்திற்கு மாற்றுவதற்கான சலுகைகளை நிராகரித்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.
அந்த இடத்தில், இயந்திரங்கள் மூலம் கூடாரங்கள் சிதைக்கப்பட்டு, லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன.
Also Read | July 07: இன்றைய தினம் வரலாற்றில் பதிவு செய்த முக்கிய நிகழ்வுகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR