இஸ்ரேல் படை வான்வழி தாக்குதலால்; 2 பேர் பலி!
ஹமாஸ் போராளிகள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் இருவர் பலி.
அமெரிக்க ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப் ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பை அடுத்து சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
காசா நகரில் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர். அவர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையில், காஸா எல்லைப்பகுதியில் இருந்து ஹமாஸ் போராளிகள் நேற்று மூன்று ராக்கெட்களை இஸ்ரேல் நாட்டுக்குள் ஏவி தாக்குதல் நடத்தினர். அதில் ஒன்று இஸ்ரேல் நாட்டின் தென்நகரமான ஸ்டெராட் மீது விழுந்தது.
இந்த நிலையில், காஸா நகரின் மத்தியில் அமைந்த நஸீரத் பகுதியில் இஸ்ரேல் விமானப் படையினர் ஹமாஸ் போராளிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தின. இதில், 2 பேர் பலியாகினர்.