ஜப்பான் மீது ஏவுகணை சோதனை செய்த வடகொரியா இன்னும் பல ஏவுகணைகள் சோதனைக்காக காத்து இருக்கின்றன என கூறி ஜப்பானை பீதியடைய செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமிபகாலமாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணையை விண்ணில் ஏவி அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக நேற்று அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளை எச்சரிக்கும் வகையில் ஜப்பான் மீது ஏவுகணை செலுத்தி சோதனை செய்தது.


இந்த ஏவுகணை 1,180 கி.மீ தூரம் கடந்து சென்று பசுபிக் கடலில் விழுந்தது. இந்த ஏவுகணை ஜப்பானின் வான் பகுதியில் சென்றதால், உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பிரதமர் அபே உத்தரவிட்டுள்ளார்.


மேலும் அந்நாட்டின் பாதுகாப்பில் கடும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரிய - அமெரிக்க கூட்டு ராணுவ நடவடிக்கையை அச்சுறுத்தம் வகையில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில் வடகொரியாவின் இந்த சோதனையை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில் 'ஐ.நா சபையில் உடனடியாக இது குறித்து ஆலோசித்து, வடகொரியா மீதான கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முடிவில் அமெரிக்காவும், ஜப்பானும் உறுதியாக உள்ளோம்' என தெரிவித்துள்ளார்.


அனால் வடகொரிய அதிபர் கிம் ஜோங், நேற்று நடந்தது வெறும் சாம்பிள் தான், இன்னும் பல ஏவுகணைகள் சோதனைக்காக காத்துகொண்டிருக்கிறது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.